இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/05/2013

ஒலுவில் கலியோடை ஆற்றினை அபிவிருத்தி செய்துவைக்கும் ஆரம்ப வைபவம்

(ஹனீபா)
கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை தொடக்கம் பாணம வரை வாழ்கின்ற மூவின மக்களின் நீர்ப்பாசனம், வீதி அபிவிருத்தி என பல்வேறுபட்ட அபிவிருத்திகள் மூலம் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி வருகின்றோம் என கிழக்கு மாகாண நீர்ப்பாசன, வீதி அபிவிருத்தி  நீர்ப்பாசன கிராமிய மின்சார அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

ஒலுவில் கலியோடை ஆற்றினை அபிவிருத்தி செய்துவைக்கும் ஆரம்ப வைபவம் (02.04.2013) முன்னாள் நீர்ப்பாசன பொறியியலாளர் யூ.எல்.அப்துல் அஸீஸ் தலைமையில் நடை பெற்றது இவ்  வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே  அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நிந்தவூர், ஒலுவில், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று பிரதேச விவசாயிகளின் சீரான நீர்ப்பாசனத் திட்டத்தை ஏற்படுத்துவதற்காக ஒலுவில் கலியோடை ஆறு அபிவிருத்தி செய்யப்படுவதனால் விவசாயிகளின் நீர்ப்பாசனத் தேவை நிவர்த்தி செய்யப்படுவது மாத்திரமன்றி ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகமும் அழகு பெருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்;வில் அட்டாளைச்சேனை பிரதேச 
செயலாளர் ஐ.எம். ஹனிபா உட்பட நீர்ப்பாசனத் திணைக்கள உயர் அதிகாரிகளும் மக்கள் பிரிதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
 

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா