பாகிஸ்தானில் நேற்று இரண்டு இடங்களில் குண்டுவெடித்ததில் 10 பேர் பலியாகினர்.
150-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அனைவரும்
அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
வட மேற்கு பாகிஸ்தானின் புறநகர் பகுதியான மலாகாண்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஆஃப்கானிஸ்தானை ஒட்டியுள்ள இந்த பகுதியில் பழங்குடியின மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். அல் கய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகவும் இது உள்ளது.
இங்கு வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையை முடித்து வெளியே வருபவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

0 comments:
Post a Comment