இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/23/2013

10 இலட்சம் பீப்பாய் மசகு எண்ணெய் அபுதாபியிலிருந்து இலங்கைக்கு

இலங்கையின் பயன்பாட்டிற்கு உகந்த வகையிலுள்ள பத்து இலட்சம் பீப்பாய் மசகு எண்ணெய்யை அபுதாபியிலிருந்து கொள்வனவு செய்துள்ளதாகவும் அவை நாட்டை நோக்கி வந்து கொண்டிருப்ப தாகவும் பெற்றோலிய கைத்தொழில் அமைச்சர் அநுரபிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

இதற்கமைய தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நாளை 24 ஆம் திகதி முதல் மீண்டும் திறக்கப்பட்டு அதன் செய ற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங் களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நார ஹேன்பிட்டியிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்றுக்காலை இடம்பெற்றது.

அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா இங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கை யில், தற்சமயம் நாட்டின் பாவனைக்கு ஏற்ப தேவையான அளவிலான எரிபொருள் கையிருப்பில் உள்ளது. எனவே, அதிக விலை கொடுத்து எரிபொருள் கொள்வனவு செய்ய வேண்டிய தேவை தற்போதைக்கு இல்லை.

2011 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அமெரிக்கா ஈரானுக்கு எதிராக பொருளாதார தடை விதித்தது. இதன் பின்னரான ஒரு வருடத்தில் இலங்கையின் எரிபொருள் தேவையில் 20 வீதத்தையும் முதல் 6 மாதங்களில் 10 வீதத்தையும் ஈரானிலிருந்து கொள்வனவு செய்ய முடிந்தது. அதன் பின்னர் ஈரானி லிருந்து எரிபொருள் கொள்வனவு செய்யப்படவே இல்லை.

சபுகஸ்கந்தையிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலுள்ள சுத்திகரி ப்பு இயந்திரங்கள் ஈரான் மசகு எண் ணெய்யை சுத்திகரிக்கும் வகையிலானவை. எனவே, இலங்கைக்கு பொருத்தமான மசகு எண்ணெய்யையே சகல சந்தர்ப் பங்களிலும் அரசாங்கம் இறக்குமதி செய்து வருகிறது. இதற்கமைய ஈரான் மசகு எண்ணெய்யைப் போன்று நைஜீரியா, லிபியா, அபுதாபி போன்ற நாடுகளின் மசகு எண்ணெய்கள் தொடர் பிலும் பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில் அபுதாபியின் மெர்பின் ரக மசகு எண்ணெய்யே சபுகஸ்கந்தை சுத்திகரிப்பு இயந்திரத்திற்கு ஓரளவு பொருத்தமானதாக அமைந்திருந்தது. இதனையடுத்தே உடனடியாக அபு தாபியிலிருந்து பத்து இலட்சம் மசகு எண்ணெய் பீப்பாய்களை கொள்வனவு செய்து இறக்குமதி செய்ய தீர்மானித் தோம். தற்பொழுது இலங்கையை நோக்கி வந்து கொண்டிருக்கின்றது என்றார். இந்நிலையில் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கப்பல் ஒன்றிலிருந்து இலங்கை ஈரானில் எரிபொருள் கொள்வனவு செய்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார்.

இந்த கருத்தை முற்றாக மறுத்த அமைச்சர் அதில் எந்த வித உண்மையும் கிடையாது. அது அபாண்டமான பொய்யாகும் என்றார். நாட்டையும், அரசாங்கத்தையும் கஷ்டத்தில் உள்ளாக்க எந்த ஒரு வார்த்தைகளையும் பயன்படுத்தலாம். அதன் பிரகாரம் திஸ்ஸ அத்தநாயக்கவின் மேற்படி கூற்று தேசத்துரோக குற்றமாகவும், தேசத்துரோக அறிவிப்பாகவுமே நான் கருதுகின்றேன்.

எரிபொருள் கொள்வனவு செய்வதும், நிதி கையாள்வதும் சட்ட விதிமுறைகளுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்படுகின்றது. என்றும் அமைச்சர் திட்டவட்டாமக தெரிவித்தார். எது எவ்வாறாயினும், அங்கு தடைகள் இன்றி மக்களுக்குத் தேவையான எரிபொருளை வழங்க முடியும். தேவையான அளவு கையிருப்பில் உள்ளது என்றும் அமைச்சர் வலியுறுத்தி கூறினார். விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, துறைமுகங்கள், மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஆரியரத்ன அதுகல ஆகியோர் கலந்து கொண்டனர்.
Bas TN

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா