ஈரானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் சவூதி அரேபியாவில் மேலும் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 8 சவூதி நாட்டவர், ஒரு துருக்கி மற்றும் ஒரு லெபனான் பிரஜை உள்ளடங்குகின்றனர்.
இதே குற்றச்சாட்டில் கடந்த மார்ச்சில் 18 பேர் கைது செய்யப்பட்டனர். எனினும் சவூதியின் குற்றச்சாட்டுகளை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது.
சுன்னி முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட சவூதி அரேபியா வளைகுடா நாடான பஹ்ரைனில் ஷியா முஸ்லிம்களின் அரச எதிர்ப்பு போராட்டத்தை ஒடுக்க கடந்த ஆண்டில் படைகளை அனுப்பியது தொடக்கம் சவூதிக்கும் ஷியா முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட ஈரானுக்கும் இடையிலான முறுகல் மேலும் அதிகரித்தமை குறிப்பிடத் தக்கது.
Bas TN
0 comments:
Post a Comment