பொகவந்தலாவை, மோரா தோட்டத்தில் 25 வயதுடைய இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவர் நேற்று (19) இரவு தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
25 வயதான பாலகிருஷ்ணன் செல்வராஜ் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவரது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Bas AD
0 comments:
Post a Comment