பாகிஸ்தானில் இம்ரான் கானின் கட்சியைச் சேர்ந்த மூத்த பெண் தலைவர் நேற்று முன்தினம் இரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.
இம்ரான்கானின் கட்சியான தஹ்ரிக்- இ- இன்சாப் கட்சியின் சிந்து மாகாண துணைத்தலைவராக பொறுப்பு வகித்தவர் சாக்ரா சாகித் ஹுஸைன்.
இவர் தனது வீட்டில் இருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் சாக்ரா சாகித் ஹுஸைனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர்.
இதில் அவர் தலையில் குண்டு பாய்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார்.
இச்சம்பவத்துக்கு தஹ்ரிக் இ- இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான்கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment