ஹஜ் யாத்திரிகர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்க மக்காவிலுள்ள 2,743 கட்டடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 762,774 யாத்திரிகளுக்கு தங்குவதற்கான வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக மக்கா ஹஜ் தங்குமிட வசதிகளுக்கான குழுவின் தலைவர் சுஹைர் அதத் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கடும் கட்டுப்பாடுகளை விதித்தே மேற்படி கட்டடங்களுக்கு ஹஜ் யாத்திரிகர்களை தங்கவைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்போது யாத்திரிகர்களின் பாதுகாப்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டதாக அதத் சுட்டிக்காட்டினார்.
இதில் மக்கா ஆளுநர் ஒசாமா அல் பார் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹஜ் தங்குமிட வசதிகளுக்கான குழுவின் தலைமையகத்திற்கு சென்று விபரமறிந்தார்.
இதன்போது அனுமதி அளிக்கப்பட்ட தங்குமிட கட்டடங்களின் பாதுகாப்பு தரம் பற்றி குழுவின் தலைவர் அதத் விளக்கினார்.
Bas TN
0 comments:
Post a Comment