(ஹனீபா)
இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின்கம்பங்களை ஏற்றி வந்த லொறி சம்மாந்துறை நெல்லுப்பிடி சந்தி நீரோடையில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று(21) காலை 6.15 மணியளவில் அம்பாறையிலிருந்த கல்முனை நோக்கி மின் கம்பங்களை ஏற்றி வந்த லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
லொறியின் முகப்பு முற்றாக சுக்கு நூராகிய நிலையிலும் சாரதி மற்றும் நடத்துனர் இருவரும் சம்மாந்துறைப் பொதுமக்கள், பொலிஸார்,இரானுவத்தின் உதவியுடன் கனரக வாகனங்களினதும் உதவியுடனும் நீண்ட நோர போராட்டத்தின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டு சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்திய சலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் நடத்துனரின் நிலை கவலைக்கிடமாக காணப்படுகின்றது.
விபத்து நடைபெற்ற இடத்துக்கு அருகில் பஸ்தரிப்பிடம் காணப்படுகின்றது சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பஸ்தரிப்பிடத்தில் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களும் பல்கலைக் கழகத்துக்கு செல்லும் மாணவர்களும் 25க்கு மேற்பட்டவர்கள் பஸ்ஸூக்காக காத்து நின்றுள்ளனர்.
நீரோடைக்குள் பாய்ந்த லொறி இன்னும் ஓர் இரு அங்குலங்கள் விலகியிருப்பின் பஸ்தரிப்பிடத்தில் நின்று கொண்டிருந்த பலருடைய உயிர்கள் காவு கொள்ளப்பட்டிருக்கும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான விசாரனைகளை சம்மாந்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment