இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/13/2013

நான்கு வயது சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்தத குற்றத்தின் பெயரில் 59 வயது பெண் மீது வழக்குப்பதிவு


நான்கு வயது சிறுவனொருவனை தனது பாலியல் திருப்திக்காக பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 59 வயது பெண்ணொருவர் மீது கம்பஹா உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் தான் நிரபராதி என நீதிமன்றில் தெரிவித்ததை அடுத்து அவரை 30,000 ரூபா ரொக்கப் பிணையிலும் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப்பிணையிலும் செல்லும்படி நீதியரசர் பியசீலி விக்கிரமசிங்க உத்தரவிட்டார்.

அத்துடன் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை வரும் ஞாயிற்றுக்கிழமை நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தில் ஆஜராகி கைச்சாத்திட வேண்டுமெனவும் நீதியரசர் உத்தரவிட்டார்.


2004.5.01 திகதி மற்றும் 2004.5.14 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இந்த சிறுவனை தனது பாலியல் திருப்திக்காக பயன்படுத்திக் கொண்டதாக ஊராபொலயைச் சேர்ந்த பெண் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Bas VI

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா