அம்பாறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மாவட்டத்தில் வீசிய மினி சூறாவளி காரணமாக பல பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளனதுடன் கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை முதல் பெய்த மழையை அடுத்து திடீரென சில நிமிடங்களுக்கு மினி சூறாவளி வீசியது. இதனால் மரங்கள் முறிந்து விழுந்தன. தகரங்கள் காற்றில் அள்ளுண்டன.
அத்துடன் பாடசாலைகளின் கூரை ஓடுகள் பறந்தன. முரக்கிளைகள் முறிந்து விழுந்தமையினால் மின்சாரம் தடைப்பட்டது. விசேடமாக மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் கடல் மிகுந்த கொந்தளிப்புடன் காணப்படுகின்றது.
கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடிப்படகுகள் கரைக்கு அடித்து தள்ளப்பட்டுள்ளதுடன் சில படகுகள் நீரில் மூழ்கியுள்ளன என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment