பாக்தாத்தில் சியா முஸ்லிம்களை பெரும்பான்மையினராகக் கொண்ட அல் ஹுசைன்னியா மாவட்டத்திலுள்ள பஸ் நிலையத்திற்கருகிலேயே, இக்குண்டுவெடிப்பு இடம்பெற்றதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈராக்கில், சன்னி மற்றும் சியா மதப்பிரிவினரிடையே ஏற்பட்டுள்ள பதற்ற நிலைக்கு மத்தியிலே இடம்பெற்ற இக்குண்டுத் தாக்குதலுக்கு, இதுவரை எந்தக் குழுவும் உரிமை கோரவில்லை.
புதன்கிழமை, நகரினுள் ஆயுதம் தாங்கிய சன்னி குழுவினர் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடாத்தியதாக அறிக்கையொன்று தெரிவிக்கின்றது.
இதேவேளை, படையினருக்கும் ஆயுதக் குழுக்களுக்குமிடையே இடம்பெற்ற மோதலில் 15 ஆயுததாரிகளும், 7 துருப்புகளும் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை ஈராக்கின் வடபகுதியில் சன்னி போராளிகளுக்கும் பாதுகாப்பு துருப்புகளுக்குமிடையே இடம்பெற்ற மோதல்களில் 20 இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment