இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/03/2013

குளித்துக் கொண்டிருந்தவர் அடித்துச் செல்லப்பட்டுள்ளார் Photos

(ஹனீபா)
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவில் காரைதீவு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காளிகோவில் கடற்கரைப்பிரதேசத்திலுள்ள முகத்துவாரத்தில் இன்று (03) 4.30 மணியளவில் குளித்துக் கொண்டிருந்த சதாசிவம் சஞ்சீவராஜ் என்பவர் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

காரைதீவு – 8ம் பிரிவு மத்திய வீதியில் வசித்துவரும் காரைதீவு விபுலானந்தா மகா வித்தியாலயத்தில் ஆண்டு 10ல் கல்வி கற்றுவரும் இவர் இன்ற பிற்பகல் தனது நன்பர்களுடன் குளித்துக் கொண்டிருக்கும் போதே கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்,

இவர் கடலில் அடித்துச் செல்லப்படுவதை அவதானித்த சகநன்பர்கள் உடனடியாக சம்பவம் தொடர்பாக அடித்துச் செல்லப்பட்டவரின் உறவினர்களுக்கு தெரியப்படுத்தியதுடன் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்படடிருந்த படகுகளின் மூலம் தேடுதல் நடாத்தியும் இதுவரைக்கும் கண்டு பிடிக்கப்படவில்லை சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கம் கடற்படையினருக்கும் தெரியப்படத்தப்பட்டுள்ளன.


0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா