இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/12/2013

தேசிய அடையாள அட்டை சர்ச்சைக்கு சுமுக தீர்வு


தேசிய அடையாள அட்டைகளை தமிழ், முஸ்லிம்களுக்கு அவர்களது தாய்மொழியான தமிழிலும் சிங்களவர்களின் தேசிய அடையாள அட்டையில் அவர்களது தாய் மொழியான சிங்களத்திலும் இருக்க வேண்டுமென்று ஒரு சாரார் தெரிவித்த யோசனை குறித்து தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் ஆலோசனைக்கூட்டம் சில தினங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தலைமை தாங் கினார். எப்போதும் ஏதாவது தவறுகள் நடைபெற்றால் அதனை சுட்டிக்காட்டி திருத்துவதற்கு தயக்கம் காட்டாத பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர், இந்நாட்டிலுள்ள தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள், மலாயர், பறங்கியர் எல்லோருமே எமது நாட்டு பிரஜைகளாவர். அவர்களை சட்டம் தனித்து பார்ப்பது தவறு.

ஆகவே, ஒரு சாரார் தமிழ், முஸ்லிம்க ளுக்கு தமிழிலும் சிங்கள மக்களுக்கு சிங்களத்திலும் தேசிய அடையாள அட்டையை வழங்க வேண்டுமென்று தெரிவித்திருக்கும் யோசனை நாட்டின் நல்லிணக்கப்பாட்டுக்கும், ஒருமைப்பாட் டுக்கும், ஒற்றுமைக்கும் தீங்கிழைப்பதாக அமைந்திருக்கிறது என்று சுட்டிக்காட்டிய அஸ்வர், தொடர்ந்தும் தேசிய அடையாள அட்டைகளில் அனைவரும் இலங்கையர் என்பதை வலியுறுத்தக்கூடிய வகையில் அவர்களுடைய பெயர், முகவரி ஆகியவற்றை தமிழிலும், சிங்களத்திலும் எழுத வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அதற்கு பதிலளித்த அமைச்சர், அஸ்வர் எம்.பியின் கருத்தை தாம் ஆமோதிப்பதாகவும் தேசிய அடையாள அட்டையில் இத்தகைய மாற்றங்களை செய்வதற்கு தாம் ஒரு போது அனுமதியளிக்கப் போவதில்லை என்றும் உறுதியளித்தார். இது அரசாங்கத்தின் கொள்கையும் அல்ல என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா