இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/13/2013

வளாத்தாப்பிட்டி காளிகோயில் உண்டியலை உடைத்து பணத்தினை திருடியவர் கைது


அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவின் வளாத்தாப்பிட்டி காளிகோயில் உண்டியலை உடைத்து பணத்தினை திருடிய நபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸ் நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஒப்படைத்துள்ளனர். 
 
வளத்தாப்பிட்டி காளி கோவிலில் அமைக்கப்பட்டிருந்த உண்டியலில் பணம் இருப்பதை அறிந்த காரைதீவு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், அலவாங்கு ஒன்றுடன் சென்று உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தினை திருட முயற்சித்த வேளையில் இவரின் செயலைக்கண்ட சிறுமி ஒருவர் அயலவர்களை அழைத்த போது பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். 
 
இவ்வாறு பிடிக்கப்பட்ட நபரையும் அவர் வைத்திருந்த அலவாங்கினையும் பொதுமக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 
 
இதன் பிரகாரம் குறித்த நபரை விசாரணை செய்த சம்மாந்துறை பொலிஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதற்கிணங்க இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 
 
இதேவேளை சம்மாந்துறை பத்திர காளியம்மன் ஆலயத்தின் பிள்ளையார் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்திற்கும் குறித்த நபருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Bas TM

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா