மஸ்கெலியா - லக்ஸபான வாழமலை தோட்டத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நேற்று (03) இடம்பெற்ற இந்த தற்கொலை சம்பவத்தில் மரணமடைந்தவர் வாழமலை தோட்டத்தில் கள கண்காணிப்பாளராக கடமையாற்றும் போல் பெரேரா என பொலிஸார் தெரிவித்தனர்.
34 வயதுடைய இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். கடந்த சில நாட்களாக இவர் தோட்ட நிர்வாகத்தினால் பணி நிறுத்தம் செய்யப்பட்டிருந்ததாகவும் நேற்று காலை தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்று வருவதாக லக்ஸபான முல்காமம் வீட்டில் இருந்து சென்றவர் வீடு திரும்பாத நிலையில் உத்தியோபூர்வ இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுப்படிக்கப்பட்டுள்ளார்.
தற்போது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் நல்லத்தண்ணீர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Bas AD
0 comments:
Post a Comment