இஸ்ரேல் உளவுப் பிரிவான மொசாட் மற்றும் அமெரிக்க உளவுப் பிரிவான சி. ஐ. ஏ. ஆகியவற்றுக்கு உளவுபார்த்த குற்றச்சாட்டில் ஈரானில் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈரான் புரட்சி நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இருவருக்கும் நேற்று தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில் மொஹமத் ஹைதாரி என்பவர் மொசாட் உளவுப் பிரிவுக்கு வேலை பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர் ஈரானின் ரகசிய தகவல்களை இஸ்ரேல் உளவுப் பிரிவுக்கு வழங்கியதாகவும், ஈரானுக்கு வெளியில் பல சந்திப்புகளை நடத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
அதேபோன்று கவ்ரொஷ் அஹமதி என்பவர் சி. ஐ. ஏ. வுக்காக ஈரானில் உளவுபார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈரானில் மேற்கொள்ளப்பட்டுவரும் உளவு நடவடிக்கைகள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாக ஈரான் அண்மையில் கூறியிருந்தது. ஈரானில் அணு விஞ்ஞானிகள் மீதான தாக்குதல்களும் உளவுப்பிரிவுகளால் நடத்தப்பட்டு வருவதாக ஈரான் குற்றம் சாட்டுகிறது.
0 comments:
Post a Comment