இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/20/2013

கணவனுடன் சண்டை: மனைவி தீக்குளித்து தற்கொலை



இரத்தினபுரி, இறக்குவானை கொரமுல தோட்டப் பிரதேசத்தில் பெண் ஒருவர் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

கணவனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து குறித்த பெண் தீக்குளித்துள்ளார். 

இவ்வேளை தீயினை அணைக்க முயன்ற குறித்த பெண்ணினது கணவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

எரிகாயங்களுடன் கணவன், மனைவி இருவரும் கஹவத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அப் பெண் நேற்று (19) இரவு உயிரிழந்துள்ளார். 

குடும்ப பிரச்சினையே இந்த உயிரிழப்பிற்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா