இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/13/2013

அமெரிக்கா,அன்னையர் தின பேரணியில் துப்பாக்கி சூடு


உலகம் முழுவதும் நேற்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அமெரிக்காவின் தெற்கு நகரமான நியூ ஓரிலீன்ஸ் பகுதியில் அன்னையர் தின பேரணி நடைபெற்றது. 

அப்போது, பேரணியாகச் சென்றவர்கள் மீது மர்ம நபர் ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் 19 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

தீவிரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டு இருக்கலாமா என்ற சந்தேகம் எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்திய பொலிஸார், இதனை தனிப்பட்ட ஒருவர் தான் நடத்தியிருப்பதாகவும், பயங்கரவாதிகளின் பங்களிப்பு எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். 

அமெரிக்காவில் இதுபோன்ற துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா