இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/11/2013

காட்டுப் பகுதியில் வைத்து பெண் மீது வல்லுறவு: நால்வர் கைது


மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் பிரதேசத்தில் பெண்ணொருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.

45 வயது பெண்ணொருவர் வீதியில் சென்றுக்கொண்டிருந்த போது அவ்வழியினால் வந்த வான் ஒன்றில் வந்தவர்கள் குறித்த பெண்ணை வீட்டுக்கு கொண்டு போய் விடுவதாக கூறி வேனில் ஏற்றிச் சென்று காட்டுப் பகுதியில் வைத்து துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

அப்பெண் மயக்கமடைந்த நிலையில் அங்கேயே அப் பெண்ணை விட்டு விட்டு குறித்த நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

பின்னர் அவ்வழியினால் மாடு மேய்த்துக் கொண்டு வந்த பெண்ணொருவர் மயக்கமான நிலையில்

பெண்ணொருவர் கிடப்பதை கண்டு முச்சக்கர வண்டியொன்றில் குறித்த பெண்ணை களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தார். அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையைடுத்து மண்டூர் பகுதியில் வீதி புனரமைப்பு வேலையில் ஈடுபட்டு வந்த நான்கு பேரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட நால்வரையும் தன்னால் அடையாளம் காட்ட முடியுமெனவும் குறித்த பெண் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
Bas VI

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா