இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/28/2013

அம்பாறையில் பின்தங்கிய தமிழ் பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்து தருமாறு கோரிக்கை

TM : அம்பாறை மாவட்டத்தில் பின்தங்கிய தமிழ் பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்து தருமாறு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஜ.எம்.மன்சூரிடம்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டத்திற்கான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  சந்திரநேரு சந்திரகாந்தனின் அழைப்பை ஏற்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஜ.எம்.மன்சூர் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலைக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு விஜயம் செய்தார். 



இதன்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டத்திற்கான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  சந்திரநேரு சந்திரகாந்தன் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.



மேலும், திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையின் வளப்பற்றாக்குறைகள் தொடர்பில்  திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் எம்.தமிழ்தாசன் மற்றும் தாதியர்களிடமும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஜ.எம்.மன்சூர் கேட்டறிந்துகொண்டார் 



இந்த வைத்தியசாலையில் குறைபாடுகளான தளபாடங்கள், கட்டிடங்கள், வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலையை தரம் உயர்த்துதல் தொடர்பில்  முன்வைக்கப்பட்டன. 



இதனைத் தொடர்ந்து உடனடித்  தேவைகளை உடனடியாக செய்து தருவதாகவும் ஏனையவற்றை கட்டம்; கட்டமாக செய்து தருவதாகவும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஜ.எம்.மன்சூர் உறுதியளித்தார்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா