(ஹனீபா)
சம்மாந்துறையிலுள்ள இலங்கைப் போக்குவரத்து சபையின் உப சாலையின்; எதிர்கால அபிவிருத்தி மற்றும் டிப்போவினை தரமுயர்த்தல் தொடர்பாக ஆராயும் முகாமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளரும், பிரதேச சபையின் தவிசாளருமான ஏ.எம்.எம்.நௌஷாட் (27.05.2013) சாலைக்கு திடீர்விஜயம் மேற்கொண்டார்.
சம்மாந்துறையிலுள்ள உப சாலையானது கடந்த காலங்களில் நட்டத்தில் இயங்கும் ஒரு சாலையாக காணப்பட்டது இதனால் இந்த சாலையின் அபிவிருத்தி தொடர்பாக எந்த ஒரு கரிசனையும் மேற்கொள்ளப்படாமல் கவனிப்பாரற்று இருந்தமை எனக்கு நன்கு தெரியும் சகல வசதிகளும் வளங்களும் இருந்தும் நஷ;டத்தில் இயங்கியமையால் அதனை கவனிப்பதில் கஷ;டம் காணப்பட்டது.
முன்னர் இந்த சாலையின் நிர்வாகம் மாற்றப்பட்டு புதிய சாலைமுகாமையாளர் நியமிக்கப்பட்டு அவருடையதும் ஊழியர்களினதும் அற்பனிப்பு காரணமாக இன்று கிழக்கில் 01ல் தர சலையாக காணப்படுகின்றது.
இந்த சந்தர்ப்பத்தில் இந்த சாலையினை அபிவிருத்தி செய்வதுடன் இதனை நிரந்தர சாலையாக அபிருத்தி செய்ய வேண்டிய பொறுப்பு எனக்கு உண்டு.
இந்த சாலைக்காக சம்மாந்துறை வங்களாவடி சந்தியில் ஒதுக்கப்பட்டள்ள நிரந்தர சாலைவளவில் புதிய கட்டிடங்களை அமைத்தத் தருவதாகவும் அதற்கு தேவையான மின்சாரம் மற்றும் நீர்வசதியினையும் பெற்றுத்தருவதாகவும் வாக்குறுதி வழங்கினார்.
அத்துடன் நான் ஜனாதிபதி மற்றும் பொக்குவரத்து அமைச்சர் அகியோரை சந்தித்து சம்மாந்தறைச் சாலைக்கு விரைவில் பல புதிய பஸ்வண்டிகள் பலதை பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளரும், பிரதேச சபையின் தவிசாளருமான ஏ.எம்.எம்.நௌஷாட் சம்மாந்துறை நெய்னாகாடு பிரதேசத்துக்கு நியமிக்கப்பட்ட பஸ்வண்டி தனது சேவையை நிறுத்திக் கொண்டள்ளதாக பொதுமக்கள என்னிடம் முறைப்பாடு செய்தள்ளனர் அதனை மீண்டும் சேவையில் ஈடுபடுத்தமாறும் சாலை முகாமையாளரிடம் கேட்டுக் கொண்டார்.
இச்சந்திப்பின் போது சாலை முகாமையாளர் வை.எல்.எம்.தாசீம், உதவிப் பொறியியலாளர் எம்.பி.எம்.நஸீர்,களஞ்சிய பொறுப்பாளர் வை.எல்.எம்.பஸீர் உட்பட சாலை ஊழியாகள் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment