இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/23/2013

கிழக்கு மாகாண முதலமைச்சரின் தடையை மீறி சாய்ந்தமருதில் வாசிகசாலை திறப்பு


கல்முனை மாநகர சபையினால் சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வாசிகசாலைக்கு கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிபின் தந்தையின் பெயர் சூட்டப்பட்டு திறப்பு விழா செய்வதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத் தடை உத்தரவு பிறப்பித்திருந்த போதிலும் குறித்த நிகழ்வு திட்டமிட்டபடி நேற்று (23) மாலை நடைபெற்றது. 

இந்த வைபவமும் பொதுக் கூட்டமும் நள்ளிரவு 12.00 மணி வரை நடைபெற்றது. 

கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் நீதியமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ‘மர்ஹூம் மீராசாஹிப் ஞாபகார்த்த மீனவர் வாசிகசாலை’ எனும் பெயரிலான அந்நூலகத்தை திறந்து வைத்தார். 

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், மாகாண அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட கட்சிப் பிரமுகர்கள் பலரும் பெரும் எண்ணிக்கையிலான பொது மக்களும் கலந்து கொண்டனர். 

குறித்த வாசிகசாலைக்கு கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிப் தன்னிச்சையாக தனது தந்தையின் பெயரை சூட்டியமையைத் தொடர்ந்து கிளம்பியுள்ள எதிர்ப்பு கிளம்பியிருந்தது. 

இதனைத் தொடந்து இந்நிகழ்வை உடனடியாக தடை செய்யுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் உத்தரவிட்டிருந்தார். 

இது தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தனது செயலாளர் யூ.எல்.ஏ.அஸீசுக்கு எழுத்து மூலம் பணிப்புரை விடுத்திருந்தார். 

“அரசாங்க நிதியினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள வாசிகசாலைக்கு தனி நபர் ஒருவரின் பெயர் சூட்டப்பட்டு திறக்கப்படுவதாக மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் எனக்கு முறைப்பாடு செய்துள்ளதாக அந்த பணிப்புரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

எனினும் இந்த உத்தரவையும் மீற நேற்று மாலை வாசிகசாலை திறக்கப்பட்டுள்ளது.
Bas AD 

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா