இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/23/2013

எங்களுக்கு உரிய தீர்வு கிட்டுமா...?மாணவர்களின் குமுறல்


பல்கலைக்கழகம் மற்றும் உயர் தொழிநுட்ப்ப கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் அரசு பருவகாலச்சீட்டு வழங்குவது சிறந்த நடைமுறையாக இருந்த போதிலும் இன்று மாணவர்கள் அதனால் பயன் பெற முடியாமை கவலைக்குரிய விடயமாகும். 

இதனையே இன்று நாங்கள் அனுபாவித்துக்கொண்டுள்ளோம் என்பது உண்மை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள மஞ்சன் தொடுவாய்  தொழிநுட்ப்பக்கல்லூரி மாணவர்களும், கிழக்குப்பல்கலைக்கழக கல்லடி வளாக மாணவர்களும் நீண்ட நேரமாக பேருந்து வருகைக்காக காத்திருந்து, பேருந்தில் அவர்களை ஏற்றாமல் செல்வது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். 

இந்த கல்லூரியில் கல்முனை, பாண்டிருப்பு, மருதமுனை, பெரிய நீலாவணை, கல்லாறு, கோட்டைக்கல்லாறு, ஒந்தாச்சிமடம், களுவாஞ்சிக்குடி,    களுதாவளை, தேற்றாத்தீவு, மாங்குளம்,செட்டிபாளையம், மற்றும் சம்மாந்துறை, காரைதீவு,  மாவடிப்பள்ளி ,சாய்ந்தமருதுலும் சில மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் பாட வேளை முடிந்து வீடு திரும்புவதற்க்காக காத்திருந்த போதும் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் இவர்களை ஒரு பொருட்டாக கவனிக்காது பேருந்தை நிறுத்தாது செல்கின்றனர். இதனால் நீண்ட நேரம் காத்திருந்து விட்டு சில மாணவர்கள் தனியார் பஸ்களில் பணம் செலுத்தி பிரயானிக்கின்றனர்.

மேலும் இவ்வாறான செயலால் மாணவர்கள் உரிய நேரத்துக்கு வீடு செல்வதிலும் பிரச்சினையாக உள்ளதோடு தமது ஏனைய கருமங்களை நிறைவேற்றுவதிலும் நடமுறை சிக்கல் காணப்படுகின்றது.

குறிப்பாக பெண் மாணவிகள் இதனால் பெருதும் பாதிக்கப்படுவது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

சில பேருந்துகளில் போதியளவு இட வசதி இருந்த போதிலும் வேண்டும் என்றே மாணவர்களை ஏற்றாமல் செல்வது மிகவும் கண்டிக்கத்தக்க விடயமாகும்.

சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விடயத்தில் அக்கறை செலுத்தி உரிய தீர்வு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்....
(சியாட்)



0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா