ஆஸாத்
சாலி சற்று முன்னர் குற்ற புலனாய்வு பிரிவிரனால் கைது செய்யப்பட்டுள்ளதாக
தகவல்கள் தெரிவிக்கிறது . இன்று அவரின் நண்பரின் இல்லத்துக்கு வந்த CID
யினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் .இன்று காலை 6 மணியளவில் அவர்
தங்கியிருந்த
அவரின் நண்பரின் வீட்டை குற்றப்புலனாய்வு
பிரிவினரும் விஷேட அதிரடி பிரிவினரும் சுற்றிவளைத்ததாகவும் பின்னர் 7:30
மணியளவில் அவர் கைது செய்யப்பட்டார் அவரின் சகோதரர் ரியாஸ் றியாஸ் சாலி
தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கள்கிழமை அவர் 4 ஆம் மாடிக்கு வருமாறு குற்ற புலனாய்வுபிரிவினரால் அழைக்கப் பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
தொடர்ந்தும் விசாரணைகளை
ஆஸாத் சாலி பயங்கரவாதத் தடைச் சட்த்தின்
120 ஆவது பிரிவின் கீழ் கைதுசெய்யப்பட்டு தொடர்ந்தும் விசாரணைகளை
மேற்கொண்டு வருவதாக குற்றப்புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் தலைமையகத்தின் 4ஆம் மாடியில்
தடுத்து வைக்கப்பட்டுள்ள அஸாத் சாலி வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட மதிய
உணவை சாப்பிடாமலும் தண்ணீர் அருந்தாமலும் மறுத்துள்ளதாக அங்கிருந்து வரும்
தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீரிழிவு நோயாளியான அஸாத் சாலி உணவு
தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவதால் அவரது உடல்நிலை மோசமடைந்ததால்
குடும்பத்தினரினதும், அவரது சட்டத்தரணிகளினதும் கோரிக்கையின் பேரில்
கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் கொழும்பு வைத்தியசாலையில் அஸாத்
சாலி தொடர்ந்து சிகிச்சை பெறவேண்டுமென வைத்தியர்கள் அறிவுறுத்திய
நிலையிலும் குற்றப் புலனாய்வு பொலிஸார் அவரை மீண்டும் 4ஆம் மாடிக்கு
கொண்டுவந்து விசாரணை நடத்துகின்றனர்.என்று அறிய முடிகிறது.
பாரிய ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு
4ஆம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள
அஸாத் சாலியை விடுதலை செய்யக்கோரி நாளை வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின்
பின்னர் கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு முன்னாள் பாரிய
ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த
ஆர்ப்பாட்டத்தில் மூவின மக்களும் கலந்துகொள்வார்கள் என நம்பப்படுகிறது.
விடுதலைக்காக முஸ்லிம்கள் ஒன்றிணைந்து துஆ பிரர்த்தனையில் ஈடுபடும் படி
கொழும்பு மாநகர சபை
முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலியின் விடுதலைக்காக அனைத்து முஸ்லிம்களும்
பொறுமையடன் துஆ பிரார்த்தனையில் ஈடுபடும்படி அகில இலங்கை உலமா கவுன்சில்
கேட்டுக்கொண்டுள்ளது. இது பற்றி உலமா கவுன்சில் தலைவர் முபாறக் அப்துல்
மஜீத் மௌலவி தெரிவித்திருப்பதாவது,
முஸ்லிம் சமூகத்துக்கான குரலாக ஒலித்த
சகோதரர் ஆஸாத் சாலி பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை
அதிர்ச்சியை தருகிறது. இது விடயம் அனைத்து முஸ்லிம்களையும் பாரிய
கவலைக்குள்ளாக்கியள்ளது. நிச்சயம் ஆஸாத் சாலி நிரபராதி என விடுதலை
செய்யப்படுவார் என்பதில் எமக்கு நிறையவே நம்பிக்கை உண்டு. ஆயினும் அவரது
விடுதலைக்காக முஸ்லிம்கள் ஒன்றிணைந்து துஆ பிரர்த்தனையில் ஈடுபடும் படி
அகில இலங்கை உலமா கவுன்சில் முஸ்லிம்களை கேட்டுக்கொள்கிறது.
0 comments:
Post a Comment