அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என்று நம் ஆன்றோர்கள் சொல்லி
வைத்தார்கள். ஆனால் அந்த நிலை படிப்படியாக மாறி அற்ப சொற்ப விடயங்களுக்காக
தம் பெற்றோர்களையே பிள்ளைகள் படுகொலை செய்யுமளவுக்கு நிலைமை
மோசமடைந்துள்ளமையானது வேதனைக்குரிய விடயமாகும்.
அண்மையில் மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் இதுபோன்றதொரு
அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்தேறியது. அதாவது தனது காதலுக்குத்
தடையாகவிருந்த பெற்றோரை திட்டமிட்டு காதலன் மூலமாக 16 வயது மகள்
படுகொலை செய்த சம்பவமே அது. இதேபோன்று மற்றுமொரு அதிர்ச்சியூட்டும்
அருவருக்கத்தக்க சம்பவம் ஒன்று கடந்த 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை
புல்மோட்டைப் பகுதியில் இடம்பெற்றது.
அதாவது புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஐந்தாம் கட்ட
மஹசென்புர பிரதேசத்தைச் சேர்ந்த எச்.எம்.சூரிய பண்டார வயது 39 மற்றும்
அவருடைய மனையவியான எஸ்.ஜீவனி அனுருத்திக்கா வயது 36 ஆகியோர்
மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவமே கடந்த 19
ஆம் திகதி இடம்பெற்றது.
இந்தப் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான இருபது வயது யுவதி
பலியானவர்களுடைய 16 வயது மற்றும் 8 வயதுடைய இரு மகள் மாரையும்
அழைத்துக் கொண்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த நிலையில் ஜா-–எல
பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரின் கைதினைத்
தொடர்ந்து இக் கொலை தொடர்பான அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கசியத்
தொடங்கின.
இப்படுகொலைச் சம்பவத்தினால் பலியான சூரிய பண்டார என்பவர்
அப்பிரதேசத்தில் சிவில் பாதுகாப்புப் படையில் சேவையாற்றி
வந்துள்ளார். அதற்கு மேலதிக வருமானத்திற்காக சாரதி தொழிலினையும்
புரிந்து வந்துள்ளார். சூரிய பண்டாவுக்கும் ஜீவனி
அனுருத்திகாவுக்கும் இரண்டு பெண் பிள்ளைகள். மூத்தவளுக்கு 16 வயது
இளைய மகளுக்கு 8 வயது. இந்த இரு மகள்மார்களும் மஹசென்புர மகா
வித்தியாலயத்தில் கல்வி பயின்று வந்தார்கள்.
இந்த இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான 20 வயதுடைய
யுவதி 5 ஆம் கட்டை மஹசென்புர புல்மோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர். கொலை
செய்யப்பட்டவர்களின் வீட்டிலிருந்து சுமார் 400 மீற்றர்
தூரத்திலேயே சந்தேக நபரான யுவதியின் வீடு அமைந்திருந்தது.
குறித்த யுவதியின் பெயர் ரூபிகா தமயந்தி. இந்த யுவதி மிகவும்
வித்தியாசமான குணவியல்புகளுடையவராக இருந்தாள். மது
அருந்துவதுஇ புகை பிடிப்பது என பல தீய பழக்கங்கள் அவரிடமிருந்தன.
ஆகையால் அவர்களது வீட்டில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டது.
இவ்வாறு பிரச்சினை உச்ச கட்டத்தை அடைந்தபோது பெற்றோர் ரூபிகாவை
வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர்.
2010 ஆம் ஆண்டிலேயே ரூபிகா தமது பெற்றோருடன் சண்டையிட்டுக் கொண்டு
வெளியேறியுள்ளார். இவ்வாறு வீட்டை விட்டு வெளியேறிய ரூபிகாவுக்கு
சூரிய பண்டார தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்தார். அன்று முதல் சம்பவ
தினம் வரை ரூபிகா சூரிய பண்டாரவின் வீட்டிலேயே இருந்துள்ளார்.
ரூபிகாவின் வருகையை அடுத்து சூரிய பண்டாரவின் வீட்டு
உறுப்பினர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்தது. அதாவது சூரிய
பண்டாரஇ அவரது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் ரூபிகா ஆகியோர்
வீட்டில் இருந்துள்ளனர். ரூபிகா மரம் ஏறுவது முதல் சகல கடின
வேலைகளையும் செய்யக்கூடியவளாக இருந்தாள். ஆனால்இ அதிகமாக தென்னை
மரம் ஏறி தேங்காய் பறித்துக் கொடுப்பதையே அவள் தொழிலாக செய்து
வந்துள்ளாள்.
சூரிய பண்டார மதுவுக்கு அடிமையானவர். அதேபோன்று ரூபிகாவும்
நன்றாக மது அருந்தக் கூடியவர். எனவேஇ இருவரும் மாலை வேளைகளில் ஒன்றாக
மது அருந்துவதை பழக்கமாக கொண்டிருந்தனர். அதேபோன்று சூரிய
பண்டாரவின் குடும்பத்தில் ஒருத்தியாக நிலை கொண்டுவிட்டாள்.
இவ்வாறான நிலையில் 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி சூரிய
பண்டாரவின் மூத்த மகள் பூப்படைந்தாள்.
அவள் பூப்படைந்து சுமார் ஒரு மாத்தின் பின்னர் ரூபிகா மெதுவாக
அவளுடன் ஓரின சேர்கையில் ஈடுபட தொடங்கியுள்ளாள். ஆரம்பத்தில் அதற்கு
விருப்பம் தெரிவிக்காத அந்த சிறுமி பின்னர் அதற்குப்
பழக்கப்பட்டுவிட்டாள். இவ்வாறு ரூபிகாவுக்கும் சூரிய பண்டாரவின்
மூத்த மகளுக்குமான ஓரின தொடர்பு விருத்தியடையத் தொடங்கியுள்ளது.
இந்த தவறான நடத்தையானது பின்னர் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து அதனை நிறுத்துமாறு மகளை எச்சரித்ததுடன் ரூபிகாவுக்கும் அது
பற்றிக் கூறியுள்ளனர். ஆனால் அவர்களோ அதை நிறுத்தாமல் தொடர்ந்து தமது
ஓரினக் காதல் செயற்பாட்டினை முன்னெடுத்துச் சென்றுள்ளனர்.
இந்த ஓரின தொடர்பானது ஒருபுறமிருக்கையில் ரூபிகா சூரிய
பண்டாரவுடனும் தவறான தொடர்பினை ஏற்படுத்தியுள்ளாள். இந்த
விடயமானது சூரிய பண்டாரவின் மூத்த மகளுக்கு தெரிய வந்துள்ளது. உடனே
அவள் ரூபிகாவுடன் சண்டையிட்டு தந்தையுடனான தவறான தொடர்பினை
நிறுத்தியுள்ளதுடன் தமது ஓரினக்காதலை தொடர்ந்தும் முன்னெடுத்துச்
சென்றுள்ளார்.
சூரிய பண்டாரவின் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். சிறிய
வீடொன்றிலேயே அவர்கள் வசித்துவந்துள்ளனர். ஆகையினால் இந்த
விடயத்தை அவர்கள் அவ்வளவாக பெரிதுபடுத்தாமல் இருந்துள்ளனர்.
அத்தோடு ரூபிகா தினந்தோறும் ஏதாவது வேலை செய்து காசு பணம் கொண்டு
வருவதாலும் ஏனைய விடயங்கள் பற்றி பெரிதாக யாரும் அக்கறை
செலுத்தவில்லை.
இது போன்ற விடயங்கள் அனேகமாக சாதாரண குடும்பங்களில் நடப்பது மிக
மிக அரிது. ஆனால்இ இந்த எளிய குடும்பத்தில் எப்படி இடம் பெற்றது
என்பது உண்மையிலேயே புதிராகத்தான் இருக்கிறது. சாதாரணமாக ஒரு
நகர்ப்புறத்தில் இது போன்ற ஒரு காதல் விவகாரம் ஏற்பட்டிருந்தால் கூட
அவ்வளவு பெரிதாக சிந்திக்க வேண்டியதில்லை. ஆனால் தொழில் நுட்ப வசதி
குறைந்த பின்தங்கிய ஒரு பகுதியில் இவ்வாறான ஒரு சம்பவம்
இடம்பெற்றிருப்பதானது உண்மையிலேயே சிந்திக்கவைத்துள்ளது.
பெரிய நாடுகள் சிலவற்றில் இந்த விடயமானது அவ்வளவு பெரிதாக
கருதப்பட ாவிட்டாலும் கூட இலங்கை போன்ற நாடுகளில் அதுவொரு
அருவருக்கத்தக்க மோசமான செயற்பாடாகவே கருதப்படுகிறது. ஆனாலும்
இவ்வாறான கலாசார சீரழிவுகள் படிப்படியாக எமது நாட்டில்
அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
இவ்வாறான நிலையில் கடந்த 14ஆம் திகதி சித்திரை புத்தாண்டு
தினத்தன்று சூரியபண்டார தனது மனைவி பிள்ளைகளுடன் பொலநறுவையில்
உள்ள தமது உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.
அவர்களுடன் ஜீவனி ரூபிகாவும் சென்றுள்ளார்.
பொலனறுவையில் உள்ள சூரிய பண்டாரவின் மனைவியின் உறவினர்
வீட்டிற்கே கடந்த 14ஆம் திகதி சூரிய பண்டாரவின் குடும்பத்தினர்
சென்றுள்ளனர். அங்கு சென்று அவர்கள் சந்தோஷமாக சித்திரை புத்தாண்டை
கொண்டாடி மகிழ்ந்தனர். சூரிய பண்டாரவின் மனைவியினது உறவினர்கள்
ரூபிகாவுக்கு மாப்பிள்ளையொன்று பார்த்துள்ளதாகவும் விரைவாக
திருமணம் முடித்து புல்மோட்டையிலிருந்து பொலனறுவைக்கு அழைத்து
வருவதாகவும் கூறியுள்ளனர்.
இந்த செய்தியானது ரூபிகாவுக்கு பேர் அதிர்ச்சியாக இருந்தது.
அதாவது ரூபிகா திருமண வாழ்க்கையில் நாட்டமில்லாதவள். அத்தோடு
சுமார் இரண்டரை வருடங்களாக சூரிய பண்டாரவின் மூத்த மகளுடன் ஓரின
காதல் தொடர்பினை மேற்கொண்டு வருபவள். ஆகையால் இந்த விடயம் தொடர்பாக
சூரிய பண்டாரவின் மூத்த மகளுடன் பேசியுள்ளார்.
ரூபிகாவுக்கு திருமணத்தில் நாட்டமில்லை. ஆகையால் தனது காதலியான
சூரிய பண்டாரவின் மூத்த மகளிடம் இந்த விடயம் தொடர்பாக
கலந்துரையாடியுள்ளாள். அத்தோடு தமது காதலை தொடர்வதானால்
சூரியபண்டாரவையும் அவரது மனைவியையும் கொலை செய்து விட்டால் சரி
என்று எண்ணிய ரூபிகா அதனை காதலியிடம் கூற அவளும் பெற்றோரை கொலை
செய்வதை வேண்டாம் என்று சொல்லாமல் இணங்கியுள்ளாள்.
இந்த கலந்துரையாடலின் பின்னரே குறித்த படுகொலை தொடர்பான
திட்டத்தினை ரூபிகா தீட்டியுள்ளாள். அதனடிப்படையில் கடந்த 19ஆம்
திகதி மாலை 1ஃ2 போத்தல் சாராயத்துடன் வந்த ரூபிகா காட்டுக்கு
வேட்டைக்கு செல்வோம் என கூறி சூரிய பண்டாரவையும் அழைத்துக் கொண்டு
வீட்டுக்கு சற்று தொலைவிலுள்ள காட்டுக்கு சென்றுள்ளாள்.
காட்டுக்கு சென்றபோது நீளமான கைப்பிடியையுடைய காட்டுக்
காத்தியுடனேயே ரூபிக்கா சென்றுள்ளாள். வேட்டைக்குச் செல்வதால்
சூரியபண்டார அவள் மீது சந்தேகம் கொள்ளவில்லை. காட்டுக்கு சென்ற
இருவரும் அங்கு 1/2 போத்தல் சாராயத்தை குடித்துள்ளனர். அதன்பின்னர்
ஒரேடியாக எழுந்த ரூபிகா காட்டுக்கத்தியை எடுத்து சூரியபண்டாரவை
தாக்கியுள்ளாள். சூரிய பண்டார துடிதுடித்து இறந்து போனார்.
சூரிய பண்டாரவை படுகொலை செய்த ரூபிகா கொலைக்கு பயன்படுத்திய காட்டுக்கத்தியினை முற்புதருக்குள் வீசி விட்டு சூரிய பண்டாரவின் வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டின் கதவு மூடியிருந்தமையினால் ஜன்னல் வழியாக புகுந்து உள்ளே சென்றுள்ளாள். அதன் பின்னர் சூரிய பண்டாரவின் மனைவி தனது கணவன் தொடர்பாக விசாரித்த போது தனக்கு தெரியாதென ரூபிகா கூறியுள்ளாள். ஆனால் மகளிடம் அப்பாவை கொலை செய்து விட்டதாகவும் அம்மாவை தூங்கிய பின் கொலை செய்வோம் எனவும் ரூபிகா காதலியிடம் கூறியுள்ளாள்.
சூரிய பண்டாரவை படுகொலை செய்த ரூபிகா கொலைக்கு பயன்படுத்திய காட்டுக்கத்தியினை முற்புதருக்குள் வீசி விட்டு சூரிய பண்டாரவின் வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டின் கதவு மூடியிருந்தமையினால் ஜன்னல் வழியாக புகுந்து உள்ளே சென்றுள்ளாள். அதன் பின்னர் சூரிய பண்டாரவின் மனைவி தனது கணவன் தொடர்பாக விசாரித்த போது தனக்கு தெரியாதென ரூபிகா கூறியுள்ளாள். ஆனால் மகளிடம் அப்பாவை கொலை செய்து விட்டதாகவும் அம்மாவை தூங்கிய பின் கொலை செய்வோம் எனவும் ரூபிகா காதலியிடம் கூறியுள்ளாள்.
அதேபோன்று அம்மா தூங்கியதும் மகள் கோடரியை எடுத்து ரூபிகாவிடம்
கொடுத்துள்ளாள். ரூபிகா தலை மற்றும் முகத்தில் சரமாரியாக கோடரியால்
தாக்கியுள்ளாள்.
அதன் பின்னர் சூரிய பண்டாரவின் இரு மகள்மார்களையும் கூட்டிக்
கொண்டு அருகில் இருந்த தனது தாயாரின் வீட்டுக்கு சென்றுள்ளாள். ஆனால்
அவர்கள் அவளை ஏற்றுக் கொள்ளவில்லை.
பின்னர் மற்றுமொரு உறவினர் வீட்டுக்குச் சென்ற ரூபிகா நடந்த
விடயங்களை கூறி 500 ரூபாய் பணத்தினை பெற்றுக் கொண்டு தனது காதலியையும்
அவளது 8 வயது தங்கையையும் அழைத்துக் கொண்டு கடந்த 20 ஆம் திகதி
அதிகாலை மூன்று மணியளவில் புல்மோட்டையிலிருந்து பஸ்ஸில் ஏறி ஜா-–எல
வந்துள்ளார்.
கடந்த 20 ஆம் திகதி காலை புல்மோட்டை பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற
ரூபிகாவின் தாய் முதல் நாள் இரவு தனது மகள் தன்னைத் தேடி வீட்டுக்கு
வந்ததையும் அவள் கூறிய விடயங்களையும் கூறி முறைப்பாடு செய்துள்ளார்.
அதனடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
காட்டில் கொலை செய்யப்பட்டுக்கிடந்த சூரியபண்டாரவின்
சடலத்தினையும் அவரது மனைவியின் சடலத்தினையும்
மரணவிசாரணைகளின் பின்னர் பொலிஸார் வைத்தியசாலைக்கு எடுத்துச்
சென்றனர். இந்த கொலை தொடர்பான சந்தேக நபர் தலைமறைவான போது அவருடன்
சூரியபண்டாரவின் மகள்மாருடன் சென்றது ஏன் என்ற சந்தேகம்
பொலிஸாருக்கு ஏற்பட்டது. ஆனால் அந்த சந்தேகத்துக்கான பதில் அடுத்த
நாளே பொலிஸாருக்கு தெரிய வந்தது.
அதாவது கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து பெறப்பட்ட வாக்கு மூலத்தின் பிரகாரமே அது தெரிய வந்தது.
ஜா-எல பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான ரூபிகா மற்றும் சூரியபண்டாரவின் இரு மகள்மார்களையும் மேலதிக விசாரணைகளுக்காக ஜா-எல பொலிஸார் புல்மோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். புல்மோட்டை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது பிரதான சந்தேக நபரான ரூபிகா வாக்கு மூலம் வழங்குகையிலேயே தமது ஓரின சேர்க்கைக்கு பிரச்சினை வந்து விடக்கூடாது என்பதற்காகவே இந்த இரட்டை கொலையினை செய்ததாக ஒப்புதல்வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.
ஜா-எல பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான ரூபிகா மற்றும் சூரியபண்டாரவின் இரு மகள்மார்களையும் மேலதிக விசாரணைகளுக்காக ஜா-எல பொலிஸார் புல்மோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். புல்மோட்டை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது பிரதான சந்தேக நபரான ரூபிகா வாக்கு மூலம் வழங்குகையிலேயே தமது ஓரின சேர்க்கைக்கு பிரச்சினை வந்து விடக்கூடாது என்பதற்காகவே இந்த இரட்டை கொலையினை செய்ததாக ஒப்புதல்வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.
தனக்கு திருமணம் முடித்து வைத்து தனது காதலியை பிரிக்க ஏற்பாடுகள்
செய்யப்பட்டதாகவும் ஆகையால் சூரியபண்டாரவையும் அவருடைய
மனைவியையும் கொலை செய்து விட்டால் தமது ஓரின காதலுக்கு பிரச்சினை
வராது என்று கருதியதாகவும் அதன் பின்னர் அது பற்றிதனது காதலியான
சூரிய பண்டாரவின் மகளுடன் கலந்துரையாடியதன் பின்னரே அவர்களை கொலை
செய்ததாகவும் சந்தேக நபர் பொலிஸில் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரான ரூபிக்காவும் அவளுடைய காதலியான சூரிய பண்டாரவின்
மூத்த மகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை 8 வயது சிறுமி
சூரியபண்டாரவின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளாள்.
அத்துடன் சந்தேக நபரான ரூபிகாவின் செயற்பாடுகள் ஆணைப்போல் இருப்பதால்
ஆணா? பெண்ணா? என்று வைத்திய அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது. இந்த படுகொலை தொடர்பான விசாரணைகள் கிழக்கு மாகாணத்துக்கு
பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தலைமையில்
புல்மோட்டை பொலிஸார் மேற்கொண்டனர். அதேபோன்று மேலதிக விசாரணைகளையும்
மேற்கொண்டு வருகின்றனர்.
எந்தவொரு குற்றத்தையும் புரிந்து விட்டு குற்றவாளியால் நிரந்தரமாக
மறைந்து வாழ முடியாது எனவும் அவர்கள் எப்படியும் பிடிபடுவார்கள் எனவும்
தெரிவிக்கும் சிரேஷ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர இது போன்ற
கலாசார சீரழிவுகள் ஏற்படுவதற்கான உளவியல் காரணங்களை கண்டறிந்து அதனை
கட்டுப்படுத்துவதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்
அவர் சுட்டிக் காட்டினார்.
Bas VI -எம்.நேசமணி
Bas VI -எம்.நேசமணி
0 comments:
Post a Comment