இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/08/2013

எனது வற்புறுத்தலின் அடிப்டையிலேயே எனது தந்தை நீராகாரத்தை உட்கொள்கின்றார்


எமது வற்புறுத்தலின் அடிப்டையிலேயே எனது தந்தை நேற்று முதல் நீராகாரத்தை மட்டும் உட்கொள்கின்றார். அவரது உடல்நிலையில் ஆரோக்கியமில்லை என அசாத் சாலியின் மகள் அமீனா அசாத் சாலி தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் அவரது தந்தையாரான கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலியின் உடல்நிலை குறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
எனது தந்தை எமது வற்புறுத்தலின் அடிப்படையிலேயே நேற்று முதல் நீராகாரத்தை உட்கொள்கின்றாரே தவிர எந்தவிதமான மருந்துகளையும் உட்கொள்ள மறுக்கின்றார். அவரது உடல்நிலை ஆரோக்கியமானதாக இல்லை.

தற்போதும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அறை எண் 45 இல் சிகிச்சை பெற்று வருகின்றார். எனது தந்தையை பார்ப்பதற்கு எனக்கும் அம்மாவுக்கும் தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அங்கு எனது தந்தையை பரிசோதிக்கும் வைத்தியர்களில் எமக்கு நம்பிக்கை இல்லாத நிலையில் நாம் பிரத்தியேகமான வைத்தியரை அங்கு கூட்டிச் செல்வதற்கு எமக்கு அனுமதியளிக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா