இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/08/2013

ஏவுகணைகளை அகற்றியது வட கொரியா


வட கொரியா தனது மத்திய தூரம் செல்லும் இரு ஏவுகணைகளை கடற்கரை ஏவுதளத்திலிருந்து அகற்றியுள்ளது.

கடந்த மாதம் அமெரிக்கா, தென் கொரியா மீது அச்சுறுத்தல் விடுக்கப் பட்டபோது ஏவு தளத்தில் பொருத்தப்பட்ட ஏவுகணைகளே அகற்றப்பட்டுள்ளன. வடகொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியிலிருந்தே அவை அகற்றப்பட்டுள்ளன. எந்த நேரமும் ஏவுகணை தாக்குதலுக்கு தயாராக இருந்த வட கொரியா தற்போது அவைகளை அகற்றிவிட்டது என அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டார்.

ஐ.நா பொருளாதார தடை மற்றும் அமெரிக்கா-தென் கொரியாவுக்கும் இடையிலான இராணுவ கூட்டு பயிற்சியையொட்டி வட கொரியா கடந்த ஒரு மாதமாக கடும் எச்சரிக்கைகளையும், யுத்தமொன்றுக்கு தயாராகும் நடவடிக்கைகளை முன்னெடுத் ததால் பிராந்தியத்தில் பதற்றநிலை நீடித்தது.
Bas TN

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா