இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/07/2013

மைக்கேல் ஜாக்சனின் குழந்தைக்கு உண்மையான தந்தை யார் ?


மறைந்த பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன், அவரது குழந்தைகளுக்கு தந்தை அல்ல என, லண்டன் பத்திரிகை தெரிவித்துள்ளது. இது குறித்து லண்டனிலிருந்து வெளிவரும், "டெய்லி ஸ்டார்´ பத்திரிகையில் கூறியுள்ளதாவது: 

அமெரிக்க பாப் இசைக் கலைஞர் மைக்கேல் ஜாக்சனுக்கு, தன் குடும்பம் மிக உயர்ந்த அளவில் இருக்க வேண்டும் என்பதில், ஆழ்ந்த விருப்பம் இருந்தது. தன் குழந்தைகள் மிகவும் அறிவாளிகளாக, புத்திக்கூர்மை உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதும் ஜாக்சனின் தீராத ஆசை. 

இதனால், தன் மனைவியின் விருப்பத்துடன், அவரது கர்ப்பப் பையில், செயற்கை கருவூட்டல் மூலம், அறிவில் சிறந்த அறிஞர்களின் உயிரணுக்களை செலுத்தி, தன் குழந்தைகளை அவர் பெற்றெடுத்தார். அவர்கள் தான், பிரின்ஸ் மைக்கேல், பாரிஸ் மற்றும் பிளாங்கெட். இதில், பிரின்ஸ், பாரிஸ் ஆகியோரை, ஜாக்சனின் மனைவி டெபி ரோவே பெற்றெடுத்தார். ஆனால், பிளாங்கெட், மற்றொரு வாடகைத் தாய் மூலம் பிறந்தார். 

அந்த வாடகைத் தாய்க்கு, ஜாக்சன் தான், தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தையாக இருக்கப்போகிறார் என்பதும் தெரியாது. இது குறித்து, பிரிட்டீஷ் நடிகர் மார்க் லெசர், 54, கூறுகையில், ""ஜாக்சனின் மூன்று குழந்தைகளுக்கும் நான் தான் தந்தை,´´ என்கிறார். 

மூன்று குழந்தைகளுக்கும், மைக்கேல் ஜாக்சன் தந்தையைப் போல் தோன்றினாலும், மருத்துவ ரீதியாக, அவரது குழந்தைகளுக்கு அவர் தந்தை அல்ல. தன் குழந்தைகள், அறிவாளிகளின் உயிரணுவிலிருந்து தான் வர வேண்டும் என்ற தீராத விருப்பமே, ஜாக்சனின் இந்த முடிவுக்கு காரணம். 

அது மட்டுமின்றி, அளவுக்கு அதிகமான குடிப்பழக்கத்தால், அவரது உயிரணுக்களின் எண்ணிக்கையும் குறைந்து போனது, ஜாக்சனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. ஒருமுறை அவர் முடிவு எடுத்துவிட்டால், அதை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்கிற பிடிவாத குணம் அவரிடம் இருந்தது. 

ஆனால், இந்த உண்மைகளை, ஜாக்சன் மறையும் வரை, யாரிடமும் சொல்லாமல் சமாளித்த பெருமை, அவரது மனைவி டெபி ரோவே சாரும். 

இவ்வாறு, "டெய்லி ஸ்டார்´ பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா