இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/07/2013

கன்னிகாஸ்திரிகளை கலங்க வைத்தவருக்கு பொலிஸ் எச்சரிக்கை


பிரான்ஸின் தென்பகுதியில் பிறந்த மேனியாக திரிந்து அவ்விடத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ மடத்தில் இருந்த கன்னிகாஸ்திரிகளுக்கு சங்கடத்தைத் தந்த ஐரிஷ்காரர் ஒருவரை பொலிசார் கண்டித்துள்ளனர்.
ப்ரொவான்ஸ் பிராந்தியத்து மலைக்குன்றுகளில் அமைந்துள்ள கன்னிகாஸ்திரி மடம் ஒன்றுக்கு அருகே ஒரு ஆண் நிர்வாணமாக அலைகிறார் என்று பலமுறை பொலிசாருக்கு ஒரு கன்னிகாஸ்திரி புகார் கூறியிருந்ததாக அந்த மடம் சார்பாகப் பேசவல்லவர் கூறினார்.
காற்றாட நடப்பதற்காக தான் அவ்விடத்துக்குச் சென்றதாகக் கூறும் இந்த நாற்பத்து ஆறு வயது ஆண், தனது நடத்தைக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
மலைச்சாரலில் இருந்து இயற்கையை ரசிப்பது நான் மட்டும் அல்ல, அங்கு மற்றவர்களும் இருந்தார்கள் என்பதை அந்நேரம் தான் உணர்ந்திருக்கவில்லை என பொலிசாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா