இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/08/2013

பிரசார மேடை சரிந்து இம்ரான் கான் படுகாயம்


பாகிஸ்தானில் தற்போது பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நடந்து வருகிறது. இந்த தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தாரிக் இ இன்சாப் கட்சி போட்டியிடுகிறது. 

இதற்காக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த இம்ரான் கான், லாகூரில் நேற்றிரவு பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றார். 

லிப்ட்டுடன் கூடிய மேடையில் அவர் நின்றிருந்த போது, திடீரென ஒரு பக்கமாக சரிந்து விழுந்தது. இதில், இம்ரான் கான் தனது கட்சியினருடன், லிப்ட் மீது விழுந்தார். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 

உடனடியாக மருத்துவமனைக்கு இம்ரான் கான் கொண்டு செல்லப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள இம்ரானுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா