இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/09/2013

புத்தி சுவாதீனமற்ற மகன் தாக்கி தாய் மரணம்

தாயை மகன் அடித்து கொலை செய்த சம்பவமொன்று காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இன்று(9.5.2013) பிற்பகளில் இடம் பெற்றுள்ளது.

இது தொடர்பாக காத்தான்குடி பொலிசார் தெரிவிக்கையில் காத்தான்குடி 3ம் குறிச்சி ஊர்வீதி பாவாலேனில் வசித்து வரும் தாயை அவரது மகன் வீட்டில் வைத்து தாக்கி அடித்து காயப்படுத்தியுள்ளார்.

படுகாயமடைந்த தாயை அயலவர்கள் காத்தான்குடி ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லும் போது இடையில் வைத்து உயிரிழந்துள்ளார்.
ஏ.றஹ்மததும்மா (54) என்பவரே இதில் உயிரிழந்தவர் என காத்தான்குடி பொலிசார் குறிப்பிட்டனர்.

தாயை அடித்து கொலை செய்த அவரது மகன் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார் எனவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம் பெற்றுவருவதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

தாயை இவ்வாறு அடித்து கொலை செய்த அவரது மகன் புத்தி சுவாதீன முற்ற சுகயீனமானவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த தாயின் சடலம் தற்போது காத்தான்குடி ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா