இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/09/2013

சம்மாந்துறைப் பிரதேச செயலகத்தில் சிப்தொற புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு

(ஹனீபா)
கல்வியை தொடருகின்ற மாணவ சமுகத்துக்கு பொருளாதாரம் தடையாக அமைந்து விடக்கூடாது என்பதற்காக கல்விக்காக பல வழிகளிலும் அரசாங்கம் கூடுதலான நிதிகளை செலவு செய்து வருகின்றது என உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.ஏல.எம்.அதாஉல்லாவின் இணைப்புச் செயலாளர் ஏ.பி.தாவூத் தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் சமுர்த்தி சமுக பாதுகாப்பு நிதியத்தின் மூலம் வழங்கப்படுகின்ற சிப்தொற புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று (08) மாலை சம்மாந்துறைப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளும் கல்வியை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற தூர நோக்குடன் கல்விக்காக மிகவும் கூடுதலான பணங்களை வருடாந்தம் ஒதுக்கி மாணவர்களுக்கு இலவச சீருடை துணி, இலவச பாடப்புத்தகம், மதிய உணவுகள் என்பன வழங்கப்பட்டு வருவதற்கு மேலதிகமாக புலமைப்பரிசில்கள் என்பனவும் வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்வாரான வசதிவாய்ப்புக்கள் எமக்கு வழங்கப்பட்டும் நாம் கல்வியை நல்ல முறையில் கற்கா விட்டால் நம்மைப் போன்று துரதிஷ;ட்ட  சாலிகள் யாரும் இருக்க முடியாது.

இன்று வருமானம் குறைந்த சமுர்த்தி குடும்பங்களின் கல்விக்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு கீழ் இயங்கி வருகின்ற சமுர்த்தி அதிகார சபையின் சமூர்த்தி சமூக பாதுகாப்பு நிதியத்தின் மூலம் உயர்தரத்துக்கு தெரிவான மாணவர்களுக்கு ஒவ்வெரு வருடமும் தேசிய ரீதியில் 8400க்கு அதிகமான மாணவர்களுக்கு சிப்தொர புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன இவற்றையெல்லாம் ஒரு வரப்பிரசாதமாகக் கொண்டு கல்வி கற்று தாய்நாட்டின் கல்வி அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்வதுடன் சிறந்த ஒழுக்கமுள்ள நல்ல கல்வி மான்களாக வரவேண்டும் இதுவே எமது நாட்டின் ஜனாதிபதி அவர்களின் எதிர்பார்ப்பாகும் எனவும் தெரிவித்தார்.

சம்மாந்துறைப் பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம்.ஹூசைன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.ஏல.எம்.அதாஉல்லாவின் இணைப்புச் செயலாளர் ஏ.பி.தாவூத் அவர்களும் கௌரவ அதிதிகளாக அம்பாறை மாவட்ட சமுர்த்தி இணைப்பதிகாரி ஐ.அலியார், சம்மாந்துறைப் பிரதேசசெயலக உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல்லத்திப், கணக்காளர் ஏ.எல்.மஹ்றூப், திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் கே.எல் ஹம்சார், சமுர்த்தி முகாமையாளர்களான எஸ்.எல்.எம்.மசூர், ஆசாத் உட்பட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பலரும் கலந்த கொண்டனர்.

இவ்வைபவத்தின் பொது சம்மாந்தறைப் பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்படட்ட 20 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் சான்றிதழ்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா