இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/10/2013

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் கிலானியின் மகன் கடத்தல்


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப் ரஸா கிலானியின் மகன் அலி ஹைதர் கிலானி, பாகிஸ்தானில் அடையாளம் தெரியாத ஆயுதம் தாங்கிய நபர்களால் கடத்தப்பட்டுள்ளார். இதனால் பாகிஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பஞ்சாப் மாகாணம் முல்தான் நகரில் வைத்து இந்த கடத்தல் நடந்துள்ளது. பரூக் நகரில் நடந்த பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தேர்தல் பேரணியின் போது புகுந்த அந்த ஆயுதம் தாங்கிய நபர்கள் அலி ஹைதரை கடத்திச் சென்றனர். இந்த கடத்தலின்போது அலி ஹைதரின் செயலாளர் மொஹையதீன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஐந்து பேர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தனர். ஏற்கனவே அலி ஹைதருக்கு பல்வேறு தீவிரவாத அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் அவர் கடத்தப்பட்டுள்ளார். அவரை கடத்தியது எந்தக் கும்பல் என்பது தெரியவில்லை.
Bas TN

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா