சவூதி அரேபியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருக்கும் இலங்கையர்களை நாடு திரும்புமாறு வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் டிலான் பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார்.
சவூதி அரேபிய அரசாங்கம் அறிவித்துள்ள பொது மன்னிப்பு காலத்தை சாதகமாக பயன்படுத்தி இலங்கை பிரஜைகள் நாடு திரும்ப வேண்டும் என அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
சவூதி அரேபியாவில் கடமையாற்றிடம் 5000 தொடக்கம் 6000 வரையான இலங்கையர்கள் நாடு திரும்ப முடியாத நிலையில் உள்ளதாக அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
சவூதி அரேபியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறுவதற்காக ஜூலை மாதம் 3 ஆம் திகதிவரை பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்காலத்திற்கு பின்னதாகவும் சட்டவிரோதமான முறையில் அந்நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் இரண்டு வருட சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என சவூதி அரேபிய சட்டம் கூறுவதாக டிலான் பெரேரா குறிப்பிட்டார்.
சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள் நாடு திரும்பும் முகமாக சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதுவராலயம் 24 மணி நேரமும் தனது சேவையை வழங்குவதாக அமைச்சர் கூறினார்.
இந்நிலையில் சவூதியிலுள்ள இலங்கையர்கள் 400 பேர் நாடு திரும்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
Bas VI
0 comments:
Post a Comment