(ஹனீபா)
இலங்கை சமுர்த்தி அதிகார சபையினால் 2012ம் ஆண்டு நடாத்தப்பட்ட சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு கொடி விற்பனையில் கூடுதலான பணங்களைச் சேகரித்த அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமையாளர்கள் மற்றும் தலைமைப்பீட முகாமையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (20) அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் எஸ்.அனுறுத்த பியதாச தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அரசாங்க அதிபர் நீல் டி அல்வீஸ் கலந்து கொண்டார் மற்றும் சமுர்த்தி மாவட்ட இணைப்பாளர் ஐ.அலியார் உட்பட பிரதேச செயலாளர்கள் சமுர்த்தி முகாமையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment