அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ குவைத் மண்டலம் சார்பாக கடந்த 31-5-2013 வெள்ளிக்கிழமை அன்று மத்திய கிழக்கு நாடுகளில் முதன் முறையாக உலக அளவில் இரண்டாவது முறையாக சிங்கள மொழியில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
நிகழ்ச்சி குவைத் தஸ்மா டீச்சர் சொசைட்டியில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சி குவைத் தஸ்மா டீச்சர் சொசைட்டியில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் புத்த மத சகோதர சகோதரிகள் கேட்ட கேள்விகளுக்கு இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள SLTJ யின் செயலாளர் சகோதரர் அப்துர் ராஸிக் அவர்கள் தெளிவான முறையில் பதிலலித்தார்.
- ஹலால் பிரச்சினை ஏன்?
- முஸ்லிம்கள் ஏன் தாடி வைக்கிறார்கள்?
- ஹிஜாப் பெண்ணடிமைத் தனமில்லையா?
- கஃபத்து
ல்லாஹ் புத்த கோயில் தானே? - பொதுபல சேனாவின் நோக்கம் தான் என்ன?
- மாற்று மதத்தவர்களை மக்காவில் நுழைய ஏன் அனுமதிப்பதில்லை?
- நபிகளாரின் பலதார மனம்,
- மற்றும் முஸ்லி ஆண்களுக்கு ஏன் நான்கு திருமண அனுமதி?
போன்ற இஸ்லாத்தைப் பற்றிய பல முக்கிய கேள்விகள் கேட்க்கப்பட்டது.
இது போன்ற நிகழ்ச்சியை மாதந்தோறும் நடத்துங்கள் என நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிங்கள சகோதரர்கள் கோரிக்கை வைத்தனர்.
நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட பதிலும், வந்தவர்களை முஸ்லிம்கள் உபசரித்த விதமும் எங்களுக்கு இஸ்லாமியர்கள் மீது நன் மதிப்பை உயர்த்தியுள்ளது என நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு சகோதரர் கூறியது மனதை நெகிழச் செய்தது.
நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனத்தில் நிகழ்ச்சி முடிந்து சென்று கொண்டிருந்த ஒரு சிங்கள சகோதரர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத அவரது நண்பரை தொடர்பு கொண்டு “அற்புதமான ஒரு நிகழ்ச்சியை தவற விட்டு விட்டீர்கள்” என கடிந்து கொண்டது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
மாலை ஐந்து மணிக்கு ஆரம்பித்து இரவு ஒன்பது மணிக்கு முடிந்த நிகழ்ச்சியில் வந்திருந்த அனைவருக்கும் மண்டலம் சார்பாக மாலை சிற்றுண்டியும், இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அரங்கத்தில் இலவசமாக நூறு பேறுக்கு மாமனிதர் நபிகள் நாயகம், ஏசு சிலுவையில் அறையப்படவில்லை, பலதார மனம் ஏன்?, இஸ்லாத்தில் இல்லறம், யார் இந்த முஹம்மது (ஸல்) அவர்கள்? ஆகிய நூல்களும் “யார் இந்த பொதுபல சேனா?” என்ற DVD யும் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
0 comments:
Post a Comment