இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

2/09/2014

இஸ்லாத்தை பின்பற்றுவதில் பெருமையடைகின்றேன் : இசையமைப்பாளர் யுவன்

(VI)
இஸ்லாம் மதத்தை பின்பற்றுவதில் தான் பெருமையடைவதாகவும் மூன்றாவது திருமணம் செய்து கொள்ளவில்லை எனவும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
 
 
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, 
 
'நான் மூன்றாவது தடவையாக திருமணம் செய்துகொள்ளவில்லை. அது நம்பகத்தன்மையற்ற செய்தி. மேலும் நான் இஸ்லாத்தை பின்பற்றுகிறேன். அதனால் நான் பெருமையடைகின்றேன்.
 
எனது முடிவிற்கு எனது குடும்பம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது இதனால் எனது தந்தைக்கும் எனக்கும் எவ்விதமான கருத்து முரண்பாடுகளும் இல்லை என அதில் தெரிவித்துள்ளார்.


»»  read more

11/29/2013

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி

(எம்.ரீ.எம்.பர்ஹான்)
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் சவளக்கடை கிளை ஏற்பாடு செய்திருந்த முஸ்லிம் சகோதரர்களுக்கான இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி 29.11.2013 ம் திகதி பி.ப. 4.30 மணிக்கு SLTJ சவளக்கடை கிளை காரியாலயத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. சகோதரர் றஸ்மின் MISc மக்களின் மார்க்க சந்தேகங்களுக்கு தெளிவுரை வழங்கினார்கள். இதில் பல சகோதரரர்கள் பங்குபற்றி பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.



»»  read more

11/20/2013

CD கடை உரிமையாளருக்கு SLTJ சம்மாந்துறைக் கிளையால் தனிநபர் மார்க்கப் பிரச்சாரம்

Thanks to SLTJ Sammanthurai Branch Web

அண்மைக்காலமாக மாற்று மத சகோதரர் ஒருவரால் சம்மாந்துறை மத்திய வீதியில் CD கடை ஒன்னு இயக்கப்பற்று வருகின்றது. இதனால் கலாச்சார சீர் கேடு ஏற்படுவதோடு பல மாணவர்களும் இங்கு CDக்களை கொள்வனவு செய்து வழி தவறி வருகின்றனர்.

இதனை அறிந்த ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சம்மாந்துறைக்கிளையினரால் அவருக்கு அழகிய முறையில் இத் திரைப்படங்களின் கோடுகள் பற்றியும் சினிமாவின் மடமை பற்றியும் தனிநபர் மார்க்கப் பிரச்சாரம் செய்யப்பட்டதுடன், அவரின் இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கு புனித குர் ஆன் மற்றும் ஆதார பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் தெளிவுரையும் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்... 


»»  read more

10/15/2013

பெருநாள் வாழ்த்து கூறலாமா? கூடாதா?


(நன்றி : P.ஜைனுலாப்தீன்)
வாழ்த்து என்றால் அதற்கு அர்த்தம் என்ன? நீங்கள் நலமாக இருக்க வாழ்த்துகிறேன் என்று கூறினால் உங்களிடம் இறைத் தன்மை இருப்பதாகத் தான் அதன் கருத்து அமைந்துள்ளது. நீங்கள் நலமாக இருக்க அல்லது மகிழ்வுடன் இருக்க அல்லது கவலைகள் மறக்க அல்லாஹ்விடம் துஆச் செய்கிறேன் என்று கூறினால் இறைவனிடம் ஒரு முஸ்லிம் சகோதரனுக்காக துஆச் செய்யும் பொதுவான அனுமதியில் இது அடங்கும். ஆசி வழங்குவது போல் அமைந்துள்ள வாழ்த்துகிறேன் என்ற சொல்லை ஒரு முஸ்லிம் கூற முடியாது. வாழ்த்துகிறேன் என்று நீங்கள் கூறுவதால் அவர் வாழ்ந்து விடுவார் என்று நம்புகிறீர்களா? அப்படி நம்ப முடியாது. நம்பக் கூடாது.


ஒரு முஸ்லிமுக்காக துஆச் செய்யலாம் என்ற பொது அனுமதியின் அடிப்படையில் பெருநாள்தினத்திலும் துஆச் செய்யலாம். ஆனால் இது பித்அத்தாக ஆகிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு செயல் எப்போது பித் அத் என்ற நிலையை அடையும் என்பதை விளங்கிக் கொண்டால் தான் இதில் நாம் கவனமாக இருக்க முடியும். ஒருவர் குறிப்பிட்ட நேரத்தில் இரண்டு ரக்அத் நஃபில் தொழ விரும்பினால் அவர் தொழலாம். குறிப்பிட்ட நாளில் நோன்பு நோற்க விரும்பினால் நோற்கலாம். பொதுவாக நஃபில் தொழ அனுமதி இருக்கிறது என்பதே இதற்கு போதுமான ஆதாரமாகும். ஆனால் நாம் கவனமாக இல்லாவிட்டால் இது கூட பித்அத்தாக மாறிவிடும். நான் காலை எட்டு மணிக்கு நஃபில் தொழுகிறேன். அதனால் அனைவரும் எட்டு மணிக்கு நஃபில் தொழ வேண்டும் என்று ஒருவர் கூறினால் - அல்லது அவர் கூறுவதை மற்றவர்கள் ஏற்றுச் செயல்படுத்தினால் - அது பித்அத் ஆகிவிடும். நான் முஹர்ரம் மாதம் முதல் நாள் அன்று நோன்பு நோற்பதால் அனைவரும் நோற்க வேண்டும் என்று ஒருவர் கூறினாலோ அதை மற்றவர்கள் ஏற்றுச் செயல் படுத்தினாலலோ அதுவும் பித்அத் ஆகி விடும். ஒருவர் தன்னளவில் தானாக விரும்பிச் செய்ய அனுமதி கொடுத்தால் அவரோடு மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். அவர் செய்வதையே அனைவரும் செய்ய வேண்டும் என்று கூறினால் அல்லாஹ்வின் தூதருடைய அதிகாரத்தைக் கையில் எடுத்தவராவார். அவர் செய்கிறார் என்பதற்காக அதை மற்றவர்கள் ஏற்றுச் செயல்பட்டால் அல்லாஹ்வின் துதருடைய இடத்தை அந்த மனிதருக்கு அளித்து விட்டார்கள் என்பது பொருள். அனைவரும் இதைச் செய்ய வேண்டும் என்று கூறும் அதிகாரம் யாருக்கும் இல்லை. ஒருவர் தான் விரும்பும் நாளில் நோன்பு நோற்கலாம் என்பதை ஒப்புக் கொள்ளும் நாம் மிஃராஜ், பராஅத் இரவுகளில் நோன்பு கூடாது என்று கூறுகிறோம். 

இதற்குக் காரணம் என்ன? அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏற்படுத்தாமல் யாரோ ஒருவரால் ஏற்படுத்தப்பட்ட வழக்கம் அனைவரும் செய்ய வேண்டும் என்ற நிலையை அடைந்து விட்டது தான் இதை பித்அத் என்று நாம் கூறுவதற்கான காரணம். ஒருவர் தற்செயலாக ரஜப் 27 அன்று நோன்பு நோற்றால் அது பித்அத் ஆகாது. இது அனைவரும் நோன்பு நோற்க வேண்டிய நாள் என்ற நிலையை ஏற்படுத்தினால் அது பித்அத் ஆகிவிடும். அனைவரும் ஒரு காரியத்தை ஒரு குறிப்பிட்ட நாளில் செய்ய வேண்டும் என்றால் அது வஹீயின் மூலம் மட்டுமே முடிவு செய்யப்பட வேண்டும். ஈத் முபாரக் என்பது எப்படி உள்ளது? அது பெருநாள் அன்று சொல்ல வேண்டிய ஒரு வார்த்தை. அது மார்க்கத்தில் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று என்ற நிலை ஏற்பட்டு விட்டது. ஒருவர் தானாக விரும்பி அந்த வார்த்தையின்அர்த்தத்துக்காக சொன்னால் அது பித்அத் ஆகாது.

ஆனால் ஒவ்வொரு முஸ்லிமும் சொல்ல வேண்டியதாக அது மாறினால் அது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டது என்று ஆகிவிடும். எவரோ ஒருவர் உருவாக்கிய சொல் அல்லாஹ்வின் தூதர் கூறிய சொல்லுக்கு நிகரான இடத்தைப் பெற்று விடுகிறது. அல்லாஹ்வின் தூதருடைய இடத்தை மற்றவர்களுக்கு வழங்கும் இந்தப் போக்கு தான் அனைத்து பித்அத்துகளுக்கும் அடிப்படையாக உள்ளது. குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட சொல்லை அனைவரும் சொல்ல வேண்டும் என்ற நிலை ஏற்படுவதை அனுமதிப்பதுமார்க்கத்துக்கு ஆபத்தாகும். ஈத் முபாரக் மட்டுமின்றி ஹேப்பி ரம்ஜான், ஹேப்பி பக்ரீத், பெருநாள் வாழ்த்து, குல்ல ஆமின் அன்தும் பி கைர் என்பது போன்ற எந்தச் சொல்லுக்கும் இது தான் நிலை. ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ஸலாம் கூறுகிறோம் என்றால் அது அனைவராலும் ஒரே மாதிரியாகச் சொல்லப்படுகிறது. அல்லாஹ்வின் தூதர் அப்படிக் கூறியதால் இது ஸுன்னத் ஆகிறது. ஈத் முபாரக் என்று எவரோ வழக்கப்படுத்திய சொல்லை அனைவரும் குரிப்பிட்ட நாளில் சொல்ல வேண்டும் என்பது பித்அத் ஆகிவிடும். இது போன்ற விஷயங்களைப் பல வருடங்கள் நாம் சொல்லிப் பழகி விட்டதால் எப்படியாவது நியாயப்படுத்த சிலர் முயல்கின்றனர். பத்து வருடப் பழக்கத்தை விட மறுக்கும் இவர்கள் பல நூறு ஆண்டுப் பழக்கமான, பராஅத், மிஃராஜ், மீலாதுஉள்ளிட்ட பித்அத்களை மக்கள் விட்டு விட வேண்டும் கூறும் தகுதியை இழந்து விடுகிறார்கள். மிஃராஜ் அன்று நோன்பு தானே வைக்கிறோம். அது தவறா என்று அவர்கள் கேட்பது போல் இது நல்ல அர்த்தம் உடைய சொல் தானே இது தவறா என்று கேட்கின்றனர். என்ன செய்கிறோம் என்பதில் கவனம் செலுத்துவது அவசியம் தான்.

அது போல் யார் சொல்லிச் செய்கிறோம் என்பதும் முக்கியமானது. ஈத் முபாரக் என்பது பெருநாளுக்கான வாழ்த்து முறை என்று ஆக்கியது அல்லாஹ்வின் தூதர் அல்ல. நோன்பு வைப்பது நல்லது என்றாலும் மிஃராஜ் அன்று நோன்பு வைக்கச் சொன்னது அல்லாஹ்வின் தூதர் அல்ல. வேறு யாரோ என்பதால் தான் அது பித்அத் ஆகிறது. அது போல் தான் இதையும் எடுத்துக் கொள்ள வேண்டும். حدثنا يعقوب حدثنا إبراهيم بن سعد عن أبيه عن القاسم بن محمد عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد رواه عبد الله بن جعفر المخرمي وعبد الواحد بن أبي عون عن سعد بن إبراهيم 2697 இம்மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது ரத்துச் செய்யப்படும் என்பது நபிமொழி- நூல் : புகாரி 2697 குறிப்பிட்ட சொல்லை அனைவரும் சொல்ல வேண்டும் என்றில்லாமல் குறிப்பிட்ட நாளில் அதைச் சொல்லித் தான் ஆக வேண்டும் என்றில்லாமல் வாழ்த்தும் வகையில் இல்லாமல் மார்க்கம் அனுமதித்துள்ள வார்த்தைகளைப்பயன்படுத்தி பெருநாளிலோ மற்ற நாட்களிலோ துஆச் செய்தால் அது தவறில்லை. பித்அத் என்பது நுணுக்கமான இன்னும் பல தன்மைகளைக் கொண்டது. நீங்கள் கேட்ட கேள்விக்கு இது போதும்.
»»  read more

6/18/2013

எறும்புக்கு அறிவு உண்டா?


சுலைமான் நபி வருவதை எறும்புகள் அறிந்து கொண்டதாக குர்ஆன் கூறுகிறது. அப்படியானால் எறும்புகள் மிதிபட்டு சாவது ஏன்? என்று சிலர் விதண்டாவாதம் செய்கிறார்கள்.

ஆனால் இன்று இவர்களின் விதண்டாவதத்துக்கு மரண அடி கொடுக்கும் வகையில் ஒரு ஆய்வின் முடிவு அமைந்துள்ளது. இது குறித்து திருக்குர்ஆன் தமிழாக்கம் 12வது பதிப்புக்காக விரிவுபடுத்தப்பட்டுள்ள பதிப்பில் பின்வருமாறு விளக்கம் அளித்துள்ளோம். (இப்பதிப்பு ஜூலையில் வெளியாக உள்ளது) 470 எறும்புகளுக்கும் அறிவு உண்டு இவ்வசனத்தில் (27:18) எறும்புகள் தமக்கு ஏற்படவிருக்கும் ஆபத்தை முன்கூட்டியே அறிந்து கொண்டு ஸுலைமானும் அவரது படையினரும் நம்மை மிதித்து விடுவார்கள் என்று சக எறும்புகளுக்கு எச்சரிக்கை செய்தது பற்றி கூறப்படுகிறது.

அப்படியானால் எறும்புகள் மனிதனின் கால்களில் மிதிபட்டுச் சாவது ஏன்? சுலைமான் நபி வருவதை அறிந்து மிதிபடாமல் தப்பித்தது போல்  இப்போதும் தப்பிக்க வேண்டியதுதானே என்று சிலர் விதண்டாவாதம் செய்வார்கள். அந்த எறும்புகள் எதை அறிந்து கொண்டதாக இவ்வசனம் கூறுகிறதோ அதை எறும்புகள் இப்போதும் அறிந்து கொள்ளத்தான் செய்கின்றன. ஸுலைமான் என்ற தனி மனிதர் வருவதை எறும்புகள் அறியவில்லை. ஸுலைமானும் அவரது படையினரும் வருவதைத் தான் அறிந்து கொண்டன. பெரிய படைகள் படைகளுக்கே உரிய அதிர்வுகளை எழுப்பித்தான் நடைபோடுவார்கள். அவர்களுடன் உள்ள யானை மற்றும் குதிரைப்படைகளாலும் நிலத்தில் மிகப்பெரிய அதிர்வுகள் ஏற்படும். இப்படி நிலத்தில் ஏற்படும் கடுமையான அதிர்வுகளையும் அந்த அதிர்வுகள் எந்தத் திசை நோக்கி நகர்கின்றது என்பதையும் மிக விரைவாக அறிந்து கொள்ளும் ஆற்றல் எறும்புகளுக்கு உண்டு என்று இப்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்தக் கண்டுபிடிப்பு இதுதான் நியூயார்க்: பூகம்பம் ஏற்படப் போவதை, சிறிய உயிரினமான, எறும்புகள் ஒரு நாளுக்கு முன்பே அறிந்து கொள்வதாக, ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூகம்பத்தை முன்கூட்டியே துல்லியமாக அறியக்கூடிய கருவி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஜெர்மனியில் உள்ள டிஸ்பர்க் பல்கலைக்கழக, உயிர் அறிவியல் துறை ஆய்வாளர், கேப்ரியல் பார்பெரிக், தன்னுடைய சக ஆய்வாளருடன், 3 ஆண்டுகள் சிவப்பு நிற சிற்றெறும்புகள் குறித்து ஆய்வு செய்தார். இதற்காக, பிரத்யேக மென்பொருளில் உருவான, வீடியோ காமிரா துணையுடன் இந்த ஆய்வை மேற்கொண்டார்.

அவர் தனது ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: சாதாரண நாட்களில், பகல் நேரம் முழுவதும் இரை சேகரிப்பதில் ஈடுபடும் எறும்புகள், இரவு நேரங்களில் தன்னுடைய இடமான புற்றில் ஓய்வெடுக்கும். ஆனால், பூகம்பம் வருவதற்கு ஒரு நாளுக்கு முன்பு, இரவு நேரத்தில், புற்றில் இருந்து வெளியேறி விடுகின்றன. பூகம்பம் ஏற்பட்ட பின்பு, சாதாரண நிலைக்கு திரும்பி விடுகின்றன. பூகம்ப நேரத்தில் பூமிக்கடியில் தோன்றும் வாயுக்கள் மற்றும் இயக்கங்கள் காரணமாக, எறும்புகள் வெளியேறுகின்றன. இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வை அப்படியே 1400 ஆண்டுகளுக்கு முன்னர் சொல்வதாக இருந்தால் அது படைத்த இறைவனால் தான் இயலும்.
Bas onlinepj.com
»»  read more

6/01/2013

சிங்கள மொழியில் குவைத்தில் நடந்த “இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்”


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ குவைத் மண்டலம் சார்பாக  கடந்த 31-5-2013 வெள்ளிக்கிழமை அன்று மத்திய கிழக்கு நாடுகளில் முதன் முறையாக உலக அளவில் இரண்டாவது முறையாக சிங்கள மொழியில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
நிகழ்ச்சி குவைத் தஸ்மா டீச்சர் சொசைட்டியில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் புத்த மத சகோதர சகோதரிகள் கேட்ட கேள்விகளுக்கு இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள SLTJ யின் செயலாளர் சகோதரர் அப்துர் ராஸிக் அவர்கள் தெளிவான முறையில் பதிலலித்தார்.
  • ஹலால் பிரச்சினை ஏன்?
  • முஸ்லிம்கள் ஏன் தாடி வைக்கிறார்கள்?
  • ஹிஜாப் பெண்ணடிமைத் தனமில்லையா?
  • கஃபத்துல்லாஹ் புத்த கோயில் தானே?
  • பொதுபல சேனாவின் நோக்கம் தான் என்ன?
  • மாற்று மதத்தவர்களை மக்காவில் நுழைய ஏன் அனுமதிப்பதில்லை?
  • நபிகளாரின் பலதார மனம்,
  • மற்றும் முஸ்லி ஆண்களுக்கு ஏன் நான்கு திருமண அனுமதி?
போன்ற இஸ்லாத்தைப் பற்றிய பல முக்கிய கேள்விகள் கேட்க்கப்பட்டது.
இது போன்ற நிகழ்ச்சியை மாதந்தோறும் நடத்துங்கள் என நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிங்கள சகோதரர்கள் கோரிக்கை வைத்தனர்.
நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட பதிலும், வந்தவர்களை முஸ்லிம்கள் உபசரித்த விதமும் எங்களுக்கு இஸ்லாமியர்கள் மீது நன் மதிப்பை உயர்த்தியுள்ளது என நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு சகோதரர் கூறியது மனதை நெகிழச் செய்தது.
நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனத்தில் நிகழ்ச்சி முடிந்து சென்று கொண்டிருந்த ஒரு சிங்கள சகோதரர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத அவரது நண்பரை தொடர்பு கொண்டு “அற்புதமான ஒரு நிகழ்ச்சியை தவற விட்டு விட்டீர்கள்” என கடிந்து கொண்டது  நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
மாலை ஐந்து மணிக்கு ஆரம்பித்து இரவு ஒன்பது மணிக்கு முடிந்த நிகழ்ச்சியில் வந்திருந்த அனைவருக்கும் மண்டலம் சார்பாக மாலை சிற்றுண்டியும், இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அரங்கத்தில் இலவசமாக நூறு பேறுக்கு மாமனிதர் நபிகள் நாயகம், ஏசு சிலுவையில் அறையப்படவில்லை, பலதார மனம் ஏன்?, இஸ்லாத்தில் இல்லறம், யார் இந்த முஹம்மது (ஸல்) அவர்கள்? ஆகிய நூல்களும் “யார் இந்த பொதுபல சேனா?” என்ற DVD யும் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
 20130531_18261020130531_18262620130531_20241420130531_20402420130531_20425320130531_204433

»»  read more

4/22/2013

சிங்கள மொழியில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்

(ரசான் DISc , எம் ரீ எம்.பர்ஹான்)
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிங்கள மொழியிலான இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நேற்று சிலாபம் கிரவுன் வரவேற்ப்பு மண்டபத்தில் 21-04-2013 நடந்து முடிந்தது.

போலீசார் இறுதிக் கட்டத்தில் குழப்பம் வரும் என்று காரணம் காட்டி நிகழ்ச்சியை நிறுத்துமாறு கூறினர். நீதி மன்ற உத்தரவுடன் வாருங்கள் நிறுத்துகிறோம் என்று SLTJஇனால் கூறப்பட்டது.

பின்னர் அப் பிரதேச நகர சபை சார்மன் இந்த நிகழ்ச்சியில் பிரச்சினை வராமல் இருக்க நான் பொறுப்பு ஏற்ப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொலிசாரின் பாது காப்போடு நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

இன் நிகழ்வில் மாற்றுமத அன்பர்களின் இஸ்லாம் தொடர்பான சந்தேகங்களுக்கு சகோதரர் அப்துர் ராசிக் (B.Com) பதில் வழங்கினார்.

இன் நிகழ்வில். மாற்றுமத அன்பர்கள் மற்றும் பெரும் திரளான மக்கள் கலந்து பயனடைந்தனர்.

»»  read more

4/21/2013

இறைத்தூதர் (ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில் திரைப்படம் இயற்றிய நபர் இஸ்லாத்தை ஏற்றார்


இறைத்தூதர் (ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில் திரைப்படம் இயற்றிய நபர்களில் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றார்.

ஒல்லாந்து நாட்டின் தீவிர வலதுசாரி கட்சியின் அங்கத்தவரான “ஈர்னாத் பஙன்டூர்” தான் இஸ்லாத்தை ஏற்று மதீனா சென்று இறைதூதர் (ஸல்) அவர்களின் கப்ரின் முன்னால் நின்று கண்ணீர் மலுக அழும் நாள் வரும் என்பதை ஒரு போதும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார். 

   “உக்காஸ்” என்ற சவுதி பத்திரிகை அவருடன் மதீனா நகர் சென்று அவரை பேட்டி கண்டது. அதில் அவர் இஸ்லாத்தை கடுமையாக எதிர்க்கும் தீவிர வலதுசாரி கட்சியில் தான் ஒரு அங்கத்தவராக இருந்து குறித்த திரைப்படத்தை இயற்றுவதில் பங்கு கொண்டதாகவும், அதனை அடுத்து இஸ்லாமிய உலகில் எழுந்த பாரிய எதிர்பலைகளை தொடர்ந்து தான் இஸ்லாத்தை படிக்க ஆரம்பித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இத்தகை தேடலின் போது இறைத்தூதரின் மீது முஸ்லிம்கள் வைத்துள்ள பற்றின் ரகசியத்தை தன்னால் புரிய முடிந்தது. அந்த பின்னணியில் தான் இஸ்லாத்தை ஏற்றதாக அவர் குறிப்பிட்டார்.

  இறைத்தூதரின் கபுருக்கு முன்னால் நின்று அவர் கடுமையாக அழுததாக குறித்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. 

   இஸ்லாத்தை பற்றிய ஆழமான தேடல் தான் இளைத்த பாரிய தவறை தனுக்கு தெளிவாக உணர்தியதாகவும் அதனை தொடர்ந்து தான் முஸ்லிம்களை படிபடியாக நெருங்கியதாகவும் இறுதியில் தான் இஸ்லாத்தை ஏற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 அடுத்த மனிதனுக்கு நேர்வழி அளிப்பது மனிதனின் கையில் இல்லை. அல்லாஹ்வே நேர்வழி கட்டுகிறான் என்பதற்கு இச் சம்பவம் சிறந்த உதாரணமாகும்.JM
»»  read more

4/10/2013

சதி வலையில் சிக்குமா முஸ்லிம் சமுதாயம் - விடியோ பயான்

கடந்த 06.04.2013 சனிக்கிழமை கொழும்பில் SLTJ  நடத்தப்படவிருந்த பொதுக் கூட்டம் அரசாங்கத்தின் தலையீட்டைத் தொடர்ந்து தடை செய்யப்பட்டது. அதே நிகழ்ச்சி ஜமாத்தின் தலைமையகத்தில் நடை பெற்றது.

உரையை கேட்க்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்

Part - 1
http://www.dailymotion.com/video/xyumlb_yy-yy-y-y-y-y-y-y-y-y-y-y-yy-y-yy-01_news#.UWXhnNip6XY

Part - 2
http://www.dailymotion.com/video/xyunc5_yy-yy-y-y-y-y-y-y-y-y-y-y-yy-y-yy-02_news#.UWXiJdip6XY
»»  read more

4/09/2013

இலங்கை முஸ்லிம்கள் தாய் நாட்டிற்கு செய்த தியாகங்கள்-Video

காலா காலமாக இலங்கை மண்ணில் வாழ்ந்து வரும் இலங்கை முஸ்லிம்களை தற்காலத்தில் சில இனவாதிகள் தேச துரோகிகள் என்றும், தாய் நாட்டிற்காக எவ்வித தியாகங்களையும் செய்யாதவர்கள் போலும் காட்சிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
 
உண்மையில் இலங்கை முஸ்லிம்கள் துரோகிகளா? தியாகிகளா?
இலங்கை முஸ்லிம்கள் தங்கள் தாய் நாட்டிற்காக செய்த தியாகங்கள் என்னென்ன என்பதைப் பற்றி ஆற்றப்பட்ட உரை

உரையை கேட்க்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்

»»  read more

வஹாபிஸம் தீவிரவாதமா? (Video) பயான்

கடந்த 06.04.2013 சனிக்கிழமை கொழும்பில் நடத்தப்படவிருந்த பொதுக் கூட்டம் அரசாங்கத்தின் தலையீட்டைத் தொடர்ந்து தடை செய்யப்பட்டது. அதே நிகழ்ச்சி ஜமாத்தின் தலைமையகத்தில் நடை பெற்றது. அந்த நிகழ்ச்சியில் வஹாபிஸம் தீவிரவாதமா? என்ற தலைப்பில் ஆற்றப்பட்ட உரை.


உரையை கேட்க்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும் 
Part 1
http://www.dailymotion.com/video/xyutfe_yy-y-yy-y-y-yy-yy-01_news#from=embediframe
Part 2
http://www.dailymotion.com/video/xyuupj_yy-y-yy-y-y-yy-yy-02_news#from=embediframe
»»  read more

4/07/2013

இனவாதமும், இலங்கை முஸ்லிம்களும்-விடியோ பயான்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் வாரந்தம் நடைபெற்று வரும் பயான் நிகழ்ச்சியில் 27.02.2013ம் திகதி சகோதரா் ரஸ்மின் அவா்கள் "இனவாதமும் இலங்கை முஸ்லிம்களும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
உரையை கேட்க்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்
»»  read more

3/28/2013

வினோதினி விவாகரம்: இஸ்லாமிய மார்கமே தீர்வு-பயான் விடியோ

(எம் ரீ எம் .பர்ஹான்)

பயான் விடியோ பார்க்க கீழ் உள்ள இணைப்பை சொடுக்கவும்.
http://video.onlinepj.com/watch_video.php?v=9RKMH43DA96X

»»  read more

3/26/2013

றிஸ்வி முப்தி காலியில் நிகழ்த்திய ஹலால் விழிப்புணர்வு நிகழ்ச்சி

 SH MOHAMED AJWATH (Doha Qatar)
ஜம்இய்யதுல் உலமா சபை தலைவர் அஷ் ஷெய்க் றிஸ்வி முப்தி (பின்நூரி) அவர்களினால்  (23/03/2013) காலியில்    நிகழ்த்திய ஹலால் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
ஜும்மஹ் உரை கேட்க்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்
http://www.youtube.com/watch?v=f8ToXAgz63c&feature=youtu.be
»»  read more

3/14/2013

தனது மகளை கொலை செய்த போதகருக்கு 4 மாத சிறைத்தண்டனை சரியா? ஜூம்மா உரை

தனது மகளை கொலை செய்த போதகருக்கு 4 மாத சிறைத்தண்டனை சரியா?
கீழ் உள்ள இணைப்பை சொடுக்கவும்
http://onlinepj.com/bayan-video/siriya_uraikal/Kolaikku-4-Matha-Sirai-thandanai-Sariya/
»»  read more

3/06/2013

போப் 16ஆம் பெனடிக் பதவி விலகக் காரணம் என்ன? வியப்புறும் தகவல்

வாடிகனின் போப் 16ஆம் பெனடிக்ட் அண்மையில் தனது பதவியிலிருந்து விலகினார். முதுமையும் நோயும்தான் காரணம் என்று அறிவித்தார். கடந்த 600 ஆண்டுகளில் பதவியிலிருந்து தாமாக விலகிய முதலாவது போப் இவர்தான். இது கத்தோலிக்க வட்டாரங்களில் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியது.

உண்மையில் வயோதிகம்தான் காரணமா? 
இவரைவிடக் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்த இரண்டாவது யோவான் பவுல் பதவியிலிருந்து விலகவில்லையே! சஊதி ஆய்வாளர் ஒருவர் இது குறித்து ஆய்வு செய்து அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டிருக்கிறார். இவர் மதங்கள் ஒப்பீட்டியல் மற்றும் வாடிகன் விவகாரங்களின் சிறப்பு ஆய்வாளர் என்பது குறிப்பிடத் தக்கது.
இஸாம் முதீர் எனும் அந்த ஆய்வாளர் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள திடுக்கிடும் தகவல்களாவன:
புராதன பைபிள் ஒன்று கிடைத்திருக்கும் இரகசியம் வெளியுலகிற்குக் கசிந்ததே உண்மையான காரணம். அதில் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வருகை பற்றிய முன்னறிவிப்பு இடம்பெற்றுள்ளது. இதைப் பார்த்த மூவர் இஸ்லாத்தை ஏற்றது மட்டுமன்றி, அதை வெளிப்படுத்தாமல் வாடிகனிலேயே தற்போது இருந்துவருகின்றனர். போப் அம்மூவரைப் பற்றி அறிய விரும்புகிறார். அவர்களில் ஒருவர்தான் தகவல் கசியக் காரணமாக இருக்க முடியும் என்று கருதுகிறார்.
இஸ்லாத்தைத் தழுவிய மற்றொருவர் தென்னாப்பிரிகா சென்றுவிட்டார். அங்கு அஹ்மத் தீதாத் அவர்களின் ஊரில் வைத்து, தான் இஸ்லாத்தை ஏற்றதை பகிரங்கமாக அறிவித்தார். இவர் இஸ்லாத்தை ஏற்றதற்கு தீதாத் அவர்களே காரணமாம்!
வாடிகன் பொறுப்பாளர்களுடன் இந்த விஷயம் தொடர்பாக நேருக்குநேர் விவாதிக்கத் தாம் தயார் என்றும் இஸாம் சவால் விடுத்துள்ளார். அவ்வாறே, வாடிகனின் பெரிய மனிதர்களில் 35 ஆயர்களும் பாதிரிகளும் இஸ்லாத்தை ஏற்றபின்பும் உயிருக்குப் பயந்து அதை மறைத்துவைத்தனர் என்பதையும் பிறகு வாடிகன் பொறுப்பிலிருந்து விலகினர் அல்லது விலக்கப்பட்டனர் என்பதையும் வாடிகனால் மறுக்க முடியுமா? என்றும் இஸாம் சவால் விடுத்துள்ளார்.
கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக போப்பும் ஆயர்களும் இந்த விஷயத்தில் மௌனம் சாதித்துவந்தனர். இச்செய்தியை மறுக்க வாடிகனால் இன்றுவரை இயலவில்லை. இறுதியாக போப் பெனடிக்ட் ராஜினாமா செய்தார்.
2006ஆம் ஆண்டில் போப் வெளியிட்ட அறிக்கைகளில் இஸ்லாத்தையும் இறைத்தூதரையும் கொச்சைப்படுத்திப் பேசிப்பார்த்தார். இதன்மூலம் விஷயத்தை மறைத்துவிடலாம் என்பது அவரது எண்ணம். ஆனால், சூனியம் சூனியக்காரனுக்கெதிராகவே திரும்பிவிட்டது; பதவி விலகிவிட்டார்.
வாடிகனின் உளவுத் துறையினர், அந்த பைபிள் பிரதி யார் கையில் உள்ளது என்பதை வலைபோட்டுத் தேடிவருகின்றனர். உண்மை என்னவென்றால், அதைப் பாதுகாக்கத் தவறியவர் போப்தான்; அதைத் தொலைத்த குற்றத்திற்காகவே இப்போது பதவியைத் தொலைத்திருக்கிறார்.
பிரிட்டன் போன்ற பல நாடுகள், போப் தங்கள் நாட்டுக்கு வந்தால் உடனே கைது செய்யத் தயாராயிருந்தன; கைதுக்கான குறிப்புகள் வெளிவந்தது உண்மை என உறுதிப்படுத்தினார் இஸாம். போப்புடைய ஆயர்கள் பலர் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதை போப் பிரயாசப்பட்டு மறைத்தார் என்பதே அந்நாடுகளின் குற்றச்சாட்டுகளாகும்.
இஸ்லாமியப் பிரசாரத்திற்கு முன்னால் இவர்களின் தோல்விகளும் இஸ்லாத்தின் வளர்ச்சியும் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமாவதும் வரவிருக்கும் போப்பிற்குப் பெரிய சவால்களாக இருக்கும்.JM
»»  read more

போப் ஆண்டவர் 16 ஆம் பெனடிக்ட் புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்?


போப் ஆண்டவர் பதினாறாம் பெனடிக்ட் புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இணையங்கள் மற்றும் பேஸ்புக்கில் இதுதொடர்பில் வெளியாகியுள்ள தகவல்களே இவை. எனினும் இவை உறுதி செய்யப்பட வில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்தவர். உலகிலுள்ள 120 கோடி ரோமன் கத்தோலிக்க பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர்களுக்குத் தலைமையேற்று வழிநடத்தக் கூடிய போப் ஆண்டவர் பதினாறாம் பெனடிக்ட் சில நாட்களுக்கு முன்னாள் தனது வயதை காரணம் காட்டி போப் ஆண்டவர் பதவியை ராஜினாமா செய்தார்.
இவரது பதவி விலகலின் உண்மை காரணம் தற்பொழுது வெளியாகி உள்ளது.
இவர் சில வருடங்களாக இஸ்லாமிய புத்தகங்களை படித்தும் குரானை ஆராய்ந்தும் வந்தார் முக்கிய விஷயம் அவர் பார்த்தது குரான் மட்டும் அல்ல , 1500 வருடங்களாக துர்கியில் மறைத்துவைக்கப்பட்டு இருந்த பைபிள் அராமிக் என்னும் மொழியில் உள்ளன அதை வாடிகன் நகரத்துக்கு தெரியபடுதபட்டுள்ளது , அதை ஆராய்வதற்காக அங்கு எடுத்துவரப்பட்டுள்ளது.
அதில் நபி (ஸல்) அவர்கள் வருகையை குறித்து எழுதப்பட்டு இருந்ததை கண்டு வாடிகன் அதிர்ந்தது , அதன் தாக்கம் தான் தற்பொழுது அவர் போப் பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.
அவர் தற்பொழுது இஸ்லாமியராக உள்ளதாகவும். அதை பற்றி பகிரங்கமாக அறிவிக்க முடியாமலும் அறிவித்தால் அவருக்கு ஆபத்து வரும் என்று கருதுவதாக வும். அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் சொல்கிறார்களாம்.
இதை பற்றி மக்களுக்கு தெரிந்தால் சாரை சாரையாக இஸ்லாத்திற்கு மக்கள் வருவதை தடுக்கு இயலாது.
»»  read more

3/01/2013

தாடியின் நன்மைகள் - கிறிஸ்தவரின் ஆய்வு

(டாக்டர் த.முஹம்மது கிஸார்)
அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தின் சமூக உளவியல் துறையைச் சேர்ந்த டாக்டர் டேனியல் நி பிரீட்மான் (Daniel G.Freeman) என்பவர் தாடி வளர்ப்பதால் உண்டாகும் இனப்பெருக்க மதிப்பு (Reproductive Value) பற்றி ஓர் ஆய்வு மேற்கொண்டார்.

  இதை நிரூபிக்க, அவரும் அவரின் மாணவர்களும் ஒரு குறிப்பிட்ட சில இளங்கலை மாணவர்களிடம், தாடி வைப்பதால் அவர்களுக்கு என்னென்ன உணர்வுகள் ஏற்படுகின்றன என்பதைப் பற்றி பிரிண்ட் செய்யப்பட்ட கேள்வி மூலமாகவும் மற்றும் நேர்காணல் மூலமாகவும் ஆய்வு செய்தார்.

 ஆய்வு செய்யும் ஒரு மாணவர், பல மாணவிகளிடம் "தாடி வைத்த ஆண்களைப்பற்றி என்ன உணர்கின்றீர்கள்" என்று நேர்காணல் எடுத்தார். அனேகமாக எல்லா மாணவிகளும், தாடியுடன் உள்ள ஆண்களின் முகம், முழுவதுமாக சவரம் செய்யப்பட்ட ஆண்களின் முகத்தைக் காட்டிலும் அதிக ஆண்மைத்தனம், முதிர்ச்சித்தன்மை, சுதந்திர உணர்வு கொண்டதாக இருப்பதாக தெரிவித்து இருந்தனர்.

 இறுதியாக இந்த ஆய்வு "தாடி, ஒரு பாலியல் காந்த விசையாகவும், ஆண்களை அதிகம் கவர்ச்சியாகவும், பெண்களுக்கு ஓர் ஈர்க்கின்ற விதமாகவும் இருப்பதாகத் தீர்மானிக்கிறது. (they concluded from their studies that beard increases “sexual magnetism” and attractiveness and makes men more appealing to  women.)

 (பெண்களின் கூந்தல் பாலியல் உறவுக்கு எந்த வகையிலும் சம்மந்தமில்லாமல் இருந்தபோதும் எப்படி ஆண்களை ஈர்ப்பதாக உள்ளதோ அது போல் தாடி பெண்களை ஈர்க்கிறது என்பது இதன் கருத்தாகும்.)

 கலிபோர்னியா ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் உளவியலாளர் ராபர்ட் ஜே.பெல்லிக்ரிணி என்பவர் 1973ஆம் ஆண்டு உளவியல் பத்திரிகையில் ஒரு ஆராய்ச்சி முடிவை வெளியிட்டார். இந்த ஆய்வுக்காக அவர், 22 வயது முதல் 25 வயது வரையிலான தங்கள் தாடியை முழுவதுமாக சவரம் செய்ய விருப்பமுள்ள எட்டுப் பேரை தேர்ந்தெடுத்தார். அவர்கள் அனைவரும் கீழ்க்கண்ட நான்கு நிலைகளில் புகைப்படம் எடுக்கப்பட்டனர்.

 1. முழு தாடியுடன்

 2. குறுந்தாடியுடன்

 3. மீசையுடன்

 4. முழுவதும் சவரம் செய்யப்பட்ட முகத்துடன்.

  இந்தப் புகைப்படங்கள் எடுத்து முடித்த உடன், மொத்தம் 32 போட்டோக்களில் ஒவ்வொரு படமும் இரண்டு ஆண்கள் இரண்டு பெண்களிடம் கொடுக்கப்பட்டன. இப்படி 64 ஆண்களிடமும் 64 பெண்களிடமும் கொடுக்கப்பட்டன. அந்த ஆண்களிடமும், பெண்களிடமும், அந்த போட்டோவில் உள்ளவர்களின் ஆளுமைப்பண்பு கூறுகள் (Personality trait) அடிப்படையில் முதன் முதலில் போட்டோவைப் பார்த்தவுடன் ஏற்பட்ட உணர்வு, அபிப்பிராயத்தை, (first impression) மதிப்பிடுமாறு கூறப்பட்டது.

 அந்த ஆய்வின் முடிவு இப்படித் தீர்மானிக்கிறது. "அந்த ஆண்களின் ஆண்மைத் தன்மை, நல்ல தோற்றம், ஆதிக்க உணர்வு, முதிர்ந்த தன்மை, தைரிய தோற்றம், தாராளவாத இயல்பு, ஆரோக்கியத் தன்மை, கவர்ச்சித் தோற்றம் ஆகிய பண்புகளும் அவர்களின் முகத்தில் உள்ள முடிகளின் எண்ணிக்கையுடன் நேரடி தொடர்பு உள்ளதாக நிரூபித்துள்ளது"

(The result of this studied by Pelligrini indicated a generally positive correlation between the amount of hair on the person’s face and is being perceived as masculine, good looking, dominant, mature, courageous, liberal, non-confirming, older healthy and attractive.)

அமெரிக்க மருத்துவர் டாக்டர்.சார்லஸ் ஹோமேஸ் (Charles Holmes) என்பவர் இப்படிக் கூறுகிறார்:

  "மக்கள் தாடி வளர்க்க ஏன் கஷ்டப்படுகிறார்கள் என்று தெரியவில்லை? தலையில் முடி வளர்க்கும்போது, அதே முடியை முகத்தில் வளர்ப்பதில் என்ன பிரச்சினை உள்ளது என்று தெரியவில்லை?” என்கிறார்.

 தலையின் முடி கொட்டிவிட்டால், மிக கஷ்டப்பட்டு வெட்கப்படும் அதே மக்கள், சந்தோசமாக தாடியை ஏன் சவரம் செய்கிறார்கள் என்பது ஆச்சர்யமாக உள்ளது.

 நீண்ட தாடி ஒரு மனிதனின் தடுமல், சளி கழுத்தை நெருங்குவதை விட்டும் தடுக்கிறது.

  தாடி மார்க்க கட்டளை மட்டுமின்றி, மனிதனுக்கு பயன் அளிக்கக்கூடியதும் ஆகும். முந்தைய அறிவு ஜீவிகள், மருத்துவர்கள் எல்லோரும் தாடி வளர்ப்பவர்களாக இருந்தார்கள். உதாரணம், லூயிஸ் பாஸ்டர், ஆபிரகாம் லின்கன் உட்பட பலர்.

 மேற்சொன்ன முன் நிகழ்வுகள், ஆய்வுகள், அறிக்கைகள் எதுவும் முஸ்லிம்களால் சொல்லப்பட்டதோ அல்லது செய்யப்பட்டதோ அல்ல.

  ஒரு முஸ்லிம் இளைஞன் தாடியுடன் ஒரு கிறித்தவ நிறுவனத்திற்கு ஒரு நேர்காணலுக்குச் சென்றான். அவன் தாடியை மழித்தால் வேலை தருவதாக அந்த நிறுவனம் கூறியது. அவன் அதை மறுத்துவிட்டு வெளியில் வந்து, அங்கு இருந்த இயேசுவுடைய போட்டோவை எடுத்துச் சென்று "நீங்கள் இயேசு எனக்கருதக்கூடிய இவர் நேர்காணலுக்கு வந்து இருந்தால், அவரிடம் இதே நிபந்தைனையைச் சொல்வீர்களா?" என்று கேட்டு, அவர்களை வாயடைக்கச் செய்தான். ஒவ்வொரு முஸ்லிமின் மனப்பாங்கும் இப்படித்தான் இருக்க வேண்டும்.

மூட நம்பிக்கையும், மருத்துவ உண்மையும்:

 "தாடியில் வளரும் பாக்டீரியா போன்ற நுண்கிருமிகள் சுகாதாரத்தைக் கெடுக்கும்" என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால் இது மூட நம்பிக்கை.

  உண்மை என்னவென்றால் "தாடியை மழிப்பதால், முகத்தில் உள்ள இயற்கையான செல்கள் நீக்கப்படுவதால், முகப் புற்றுநோய் வரலாம்" என்று அஞ்சப்படுகிறது.

  ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து முறை ஒழு செய்யும் போது முகத்தைக் கழுவினால், எங்கிருந்து நுண்கிருமிகள் வரும்? என்பதே அறிவியல் பூர்வமான கேள்வி.

நேர விரயம்:

போஸ்டன் பல்கலைக்கழகத்தின் டாக்டர் ஹெர்பெர்ட் மேஷ்கோன் (Herbert Mescon) இப்படி கணக்கிடுகிறார்: இளவயதினர் தனது 15 வயதில் முகச்சவரம் செய்ய ஆரம்பித்து தொடர்ந்து சராசரியாக 55 வயது வரை செய்தால், அவர் சராசரியாக 3,350 மணிநேரம் அதாவது 139 நாட்களை சவரம் செய்வதில் செலவழிக்கிறார்."

தாடியின் நன்மைகளில் சில:

  தாடி மனிதனின் முகத்தை, தீங்குதரும் இரசாயனம், காற்றில் உள்ள மாசுக்களிடம் இருந்து பாதுகாக்கிறது. இந்த மாசு, மற்றும் இராசயனத்தால், முகத்தின் செல்கள் பாதிக்கப்பட்டு, சுருங்கி, அசிங்கமான தோலாக நாளடைவில் ஆகிறது.

 இதனால் முகச்சுருக்கம், மோசமான தோல், தோல் வயோதிகம் ஆகியவற்றில் இருந்து தாடி பாதுகாக்கிறது.

  தாடி முகத்தில் உள்ள சரும மெழுகு சுரப்பிகள் என்னும் செபாசியஸ் கிளாண்டை (sebaceous gland) பாதுகாத்து, அதில் நோய் தொற்றி, பருக்கள், சலம், புள்ளிகள் வருவதை விட்டும் தடுக்கிறது.

 தாடி முகத்தைச் சற்று வெதுவெதுப்பாக வைத்து, கன்னத்தை ஆபத்தில் இருந்து பாதுகாக்கிறது.

 தாடி தொண்டை மற்றும் பல் ஈறுகளின் நோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

தாடி வைப்பதால் அநேக சுவாச பிரச்சினைகள் தடுக்கப்படுகிறது.

தாடி ஓரு ஆணின் அடையாளம். தனித்துவம்.

தாடி வைப்பதால், மனிதனின் பொன்னான நேரம் மிச்சப்படுகிறது. (மேல்சொன்ன டாக்டர் ஹெர்பெர்ட் மேஷ்கோன் (Herbert Mescon) கணக்குப்படி.

 தாடி வைப்பதால், மனிதனின் செலவு மிச்சப்படுகிறது. (சவர பிளேட், ஷேவிங் ஜெல், பிறகு தடவக்கூடிய லோசன் என அனைத்தும் மிச்சம்)

  இந்தக் கூற்றுக்கள் எல்லாம், இஸ்லாத்தின் சுன்னத்தை நியாயப்படுத்திட நானோ அல்லது வேறு முஸ்லிமோ கூறியது அல்ல. பெரும்பாலும் கிறித்தவ அறிஞர்களாலும், மற்ற மதத்தைச் சார்ந்தவர்கள் நடத்தும் இணைய தளங்களும் கூறுகின்றன.
»»  read more
புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா