இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

6/22/2013

மீண்டுமொரு அரபு வசந்தம் ?: பிரேசிலில் உக்கிரமடையும் போராட்டங்கள்!


பிரேசிலில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆரம்பமாகிய பொதுமக்களின் போராட்டம் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

போராட்டத்தில் 1 மில்லியனுக்கும் அதிகமானோர் குதித்துள்ளதுடன் பிரேசிலின் சுமார் 100 நகரங்களில் இவை நடப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதிகரித்துவரும் போக்குவரத்துச் செலவு, வரி வசூலிக்கும் அரசு பொதுச் சேவைகளை ஒழுங்காக வழங்காமை மற்றும் அடுத்தவருடம் நடைபெறவுள்ள உலக்கிண்ண உதைப்பந்தாட்ட போட்டிகளையொட்டி பெரும் தொகை பணம் செலவிடப்படுவதாகவும் அதில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்றுவருவதாகவும் கூறியே போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.

போராட்டங்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போராட்டங்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் கடுமையாக முயன்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல இடங்களில் கடைகள் உடைக்கப்பட்டுள்ளதுடன் பொதுச் சொத்துக்களும் பாரியளவில் சேதமாக்கப்பட்டுள்ளன.

அரபு வசந்தம் பாணியிலான போராட்டங்களே இங்கே முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா