இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

6/24/2013

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் இன நல்லுறவை ஏற்படுத்தும் வேலைத்திட்டம்


(ஹனீபா)
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சி வேலைத்திட்டத்தின் கீழ் வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்திலுள்ள அடம்பன், முருங்கன், முசலி, சிலாபத்துறை, முரசுமோட்டை போன்ற பிரதேசங்களிலுள்ள தமிழ்,முஸ்லீம் இளைஞர்களுக்கும் ஊவா,மத்திய, சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலுள்ள சிங்கள இளைஞர் யுவதிகளுக்குமிடையிலான பரஸ்பர இன உறவுப்பாலம் வேலைத்திட்டத்தின் கீழ் வடமாகண இளைஞர் யுவதிகள் (22.06.2013) சனிக்கிழமை ஊவா மாகணத்தின் மொனராகலை மாவட்டத்திற்கு வருகை தந்தனர்.

இங்குள்ள புராதான நகரங்களையும் முக்கிய இடங்களையும் அங்குள்ள மக்களுடைய உணவுப்பழக்க வழக்கங்கள் மற்றும் கலாசார சிறப்பம்சங்களையும் அறிந்து கொண்டதுடன் அவர்களின் வீடுகளுக்கு சென்று உணவு சமைத்து உண்டு பரிமாறி கொண்டதுடன் கடந்த 30 வருடங்களாக எதுவும் அறியாமல் கொண்டிருந்த கசப்புணர்வுகளை களைந்து அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்திக் கொண்டனர்.

இதே வேளை இவர்கள் மொனராகலை மாவட்ட சுற்றுப்பயனத்தின் மூலம் கற்றுக் கொண்டவற்றை வெளிப்படுத்தும் வகையில் மொனராகலை ஆசீரி ஹெட்டலில் ஒன்று கூடல் ஒன்றையும் ஒழுங்கு செய்யது கருத்துப்பரிமாறல்களை மெற் கொண்டனர்.

இந்த நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பிரதித் திட்டப்பணிப்பாளர் டி. டபிள்யூ. லக்ஷ;மன் பண்டார, மொனராகலை மாவட்ட பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ரவிரத்னாயக்கா மற்றும் மீள் எழுச்சித்திட்ட ஒருங்கிணைப்பாளர்களான எஸ்.சுதர்சன், லக்ஷhன் உட்பட பலர் கலந்த கொண்டனர்.

இந்த இன உறவுப்பாலம் வேலைத்திட்ட சுற்றுலாவில் 110 இளைஞர் யுவதிகள் கலந்த கொண்டனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா