(ஹனீபா)
பொத்துவில் பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் (24.06.2013) பொத்துவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்; தலைவருமான உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம் அதாஉல்லா தலைமையில் நடைபெற்றது.
இதன் போது , பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.ஜெமீல், பிரதேசசெயலாளர் எம்.ஐ.எம்.தௌபீக், தவிசாளர் எம்.எஸ்.எம்.பாசீத்;, உட்பட திணைக்களத் தலைவர், அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கலந்து கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் பொத்துவில் பிரதேசத்தில் அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படத்தப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன் அங்கு கானப்படுகின்ற குறைபாடுகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டன.
எதிர்காலத்தில் இப்பிரதேசத்தின் அபிவிருத்தியில் கூடுதலான கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் கருத்தத் தெரிவித்தார்.








0 comments:
Post a Comment