அம்பாறை மாவட்டத்தில் இயங்கும் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2013ஆம் ஆண்டின் இரண்டாம் தொகுதி பயிற்சிநெறிகளுக்காக இளைஞர், யுவதிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதற்கமைவாக, இம்மாவட்டத்தில் அமைந்துள்ள 16 தொழிற்பயிற்சி பயிற்சி நிலையங்களினால் வழங்கப்படும் 47 பயிற்சிநெறிகளுக்கு எதிர்வரும் 30ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம்.
இதற்கமைய அம்பாறை மாவட்டத்தின் தமிழ்பேசும் பிரதேசங்களில் அமைந்துள்ள நிந்தவூர் (மாவட்ட) தொழிற்பயிற்சி வளாகத்தினால் வழங்கப்படும் தையல் மற்றும் சாரதிப் பயிற்சி பயிற்சிகளுக்கும் சம்மாந்துறை தொ.ப.நிலையத்தின் வாகன திருத்துனர், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் தேசிய சான்றிதழ், மோட்டார் வைண்டிங், ஆடைதொழிற்சாலை தரக் கட்டுப்பாட்டாளர், அதிவேக தையல் இயந்திர இயக்குனர், பேக்கரி தொழில்நுட்பம் போன்ற பயிற்சிகளுக்கும்
மத்திய முகாம் நிலையத்தினால் வழங்கப்படுகின்ற நிர்மாண கைவினைஞர், நீர்க்குழாய் பொருத்துனர், வீட்டு மின்னிணைப்பாளர், தையல், ஒட்டுவேலை செய்பவர், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர், முச்சக்கரவண்டி திருத்துனர் பயிற்சிநெறிகளுக்கும் பொத்துவில் தொ.ப.நிலையத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர், சமையல் கலைஞர், உணவு விடுதி, வீட்டு மின்னிணைப்பாளர், அறை பராமரிப்பாளர், மர கைவினைஞர், ஆகிய கற்கைகளுக்கும் காரைதீவு பயிற்சி நிலையத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் தேசிய சான்றிதழ், நீர்க்குழாய் பொருத்துனர், அலுமீனியம் பொருத்துனர், நிர்மாண கைவினைஞர் ஆகிய கற்கைகளுக்கும் அக்கரைப்பற்று நிலையத்தினால் வழங்கப்படும் மோட்டர் வைண்டிங், வீட்டு மின்னிணைப்பாளர், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர் மற்றும் மர பூச்செதுக்குனர் கற்கைநெறிகளுக்கும் சாய்ந்தமருது தொழிற்பயிற்சி நிலையத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் தேசிய சான்றிதழ், வீட்டு மின்னிணைப்பாளர் பயிற்சிகளுக்கும் இறக்காமம் மற்றும் ஆலையடிவேம்பு பயிற்சி நிலையங்களால் வழங்கப்படும் மர கைவினைஞர் கற்கைநெறிக்கும் கல்முனை பயிற்சி நிலையத்தின் நீர்;க் குழாய் பொருத்துனர் பயிற்சிக்கும் இப்போது விண்ணப்பிக்கலாம்.
இதுதவிர, சிங்கள மொழிமூலத்திhன அம்பாறை தொழிற்பயிற்சி நிலையம், அம்பாறை விசேட தொ.ப.நிலையம் மற்றும் தெகியத்தக்கண்டிய, தமண, மகா ஓயா, வீரகொட பிரதேசங்களிலுள்ள தொழிற்பயிற்சி நிலையங்களினால் வழங்கப்படுகின்ற கற்கைகளுக்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. மாவட்டத்திலுள்ள அதிகமான கற்கைகளுக்கு அனுமதிபெற தரம்-9 சித்தியடைந்திருத்தலே போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பங்களை - உதவிப் பணிப்பாளர், மாவட்ட தொழிற்பயிற்சி வளாகம், பிரதான வீதி, நிந்தவூர் என்ற முகவரிக்கு அனுப்பலாம் அல்லது சம்பந்தப்பட்ட பிரதேச தொ.ப. நிலையங்களில் கையளிக்கலாம். மேலதிக விபரங்களுக்கு 067 2251155 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும என அறிவிக்கப்பட்டுள்ளது.
Bas TM






0 comments:
Post a Comment