இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

6/11/2013

சம்மாந்துறையில்இடம் பெற உள்ள அபிவிருத்தி திட்டங்கள். photos

(சியாட்)
சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சம்மாந்துறை தொகுதி அமைப்பாளருமான ஏ.எம்.எம்.நௌஷாட் அவர்களின் முயற்சியினால் அன்மைக்காகமாக சம்மாந்துறையில் பல அபிவிருத்திப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் சம்மாந்துறை ஹிஜ்ர மணிக்கூட்டு கோபுரத்துக்கு வர்ணம் பூசி புது தோற்றத்துடன் காட்சி அளிப்பதுடன்,சம்மாந்துறை பொது சந்தை,வங்களாவடி வரவேற்ப்பு கோபுரம் என்பவற்றுக்கு வர்ணம் பூசும் பனியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.மேலும் ஹிஜ்ர பிரதான வீதி இரு மருங்கிலும் கால்பதிக்கும் பணிகளும் மும்புரமாக நடை பெற்று வருகின்றது.

மேலும் 19 மில்லியன் ரூபாய் செலவில் சோனகர் அராப்பத்தை வடிகான் அமைக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பின் வரும் அபிவிருத்தி திட்டங்களுக்கான பணம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் விரைவில் கீழ் வரும் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் தவிசாளர் குறிப்பிட்டார்.


அந்த வகையில் சின்ங்க ஸ்ரீலங்கா நிதி உதவியுடன் அமீர் அலி நூலகத்தில் ஈ லைபரி அமைத்தல் 

தகவல் தொழிநுட்ப அமைச்சின் அனுசரணைடன் சென்னால் கிராமம், கல்லரச்சல், மல்வத்தை போன்ற பிரதேசங்களில் நேனசல கல்வி மையம் அமைத்தல்.

55 மில்லியன் ரூபாய் செலவில் அம்பாறை கல்முனை பிரதான வீதி (நெல்லுப்பிடி சந்தியில் இருந்து ஹிஜ்ர சாந்தி வரை) காபட் இடல்.

55 மில்லியன் ரூபாய் செலவில் பூமரத்து சந்தியில் இருந்து ஆண்டிட சாந்தி வரை காபட் இட்டு அப்பாதையை அப்துல் மஜீட் வீதியாக பெயரிடல். 

30 மில்லியன் ரூபாய் செலவில் சம்மாந்துறை ஆதர வைத்திய சாலையில் வேட் அமைத்தல்.

11 மில்லியன் ரூபாய் செலவில் ஜனாதிபதி கலாச்சார விளையாட்டு மத்திய நிலையத்தை புனர் நிர்மாணம் செய்தல்.

சம்மாந்துறை விளையாட்டு கட்டிட தொகுதியின் நீச்சல் தடாகத்துக்கு அருகாமையில் பார்வையாளர் அரங்கு அமைத்தல்.

சம்மாந்துறை மல்வத்தை பகுதியில் சிறுவர் பூங்கா அமைத்தல்.

மல்வத்தை ,வளத்தப்பிட்டி பகுதியில்சந்தை அமைத்தல். 

40 மில்லியன் ரூபாய் செலவில் சம்மாந்துறை அரபா வீதி புனர் நிர்மாணம் செய்தல். 

சம்மாந்துறையில் நவீன முறையிலான மடு அறுக்கும் மடுவம் அமைத்தல். 

14 மில்லியன் ரூபாய் செலவில் சம்மாந்துறை மையவாடி வீதி நிர்மாணம்.

விரைவில் இப் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


1 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா