வடக்கு அயர்லாந்தை சேர்ந்த, ஜேம்ஸ் மார்டின் டொனாகி என்ற கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியாருக்கு 10 வருடங்கள் சிறைத் தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களிடம் பாலியல் உறவு வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்ட இவருக்கு எதிராக, பெல்பாஸ்ட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதன் மீது நடந்த விசாரணையின் போது தான் எந்தவித குற்றமும் செய்யவில்லை என அவர் மறுத்தார்.
பின்னர் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். அதை தொடர்ந்து அவருக்கு 10 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
17 பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக அவருக்கு இத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.







0 comments:
Post a Comment