(ஏ.எம். தாஹாநழீம்)
மாணவர்கள்
மத்தியில் சுகாதாரப் பழக்க வழங்களை மேம்படுத்தி சிறந்த ஒரு ஆரோக்கியமான மாணவ சமூகத்தை
உருவாக்கும் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள சகல பாடசாலைகளில் சுகாதாரக் கழகங்கள் உயிரோட்டமுள்ளதாக
இயங்கிவருகின்றது என்பதை நாம் அவதானிக்க முடியும்.
இந்த
வகையில் வலய மட்ட பாடசாலை ரீதியாக போட்டிகள் நடாத்தப்பட்டு அதில் வெற்றி பெறும் பாடசாலைக்கு
தங்கம், வெள்ளி, வென்கலம் என பரிசுத்திட்டத்தை கல்வி அமைச்சு அறிமுகப்படுத்தி நடமுறைப்படுத்தி
வருகின்றது.
இந்
நிகழ்வும்
2013.07.11 ஆந் திகதியன்று நடைபெற்றது, அத்துடன் இந்த ஆண்டு சம்மாந்துறை
வலயத்தில் நடைபெற்ற போட்டியில் சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்,
தங்கப்பதக்கத்தை
தட்டிக்கொண்டது. மேலும, அவை தழுவிய அடுத்த ஆண்டு போட்டியில் பங்குபற்றும்
பாடசாலைகளுக்கான
அறிமுக விழாவும் பாடசாலை கணனி வள நிலையத்தில் சம்மாந்துறை வலய
பிரதிக்கல்விப் பணிப்பாளர் A. றஹிம் அவர்கள் விழாவை ஆரம்பித்து வைத்ததுடன்
இவ்விழாவிற்கு இவ்வித்தியாலயத்தின் பிரதி அதிபர் ஏ.எம். தாஹாநழீம் தலைமை
வகித்தார்.
இதனை
வலயக்கல்வி ஆசிரிய ஆலோசகர் KIM. அலியார் வழிநடாத்தியதுடன் இதில் சம்மாந்துறை பிரதேச
சகாதார பணிமனை ஊழியர்களும் கலந்து தங்களுடைய ஆலோசனைகளை வழங்கினார்கள்.








0 comments:
Post a Comment