இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

7/12/2013

அகில இலங்கை தமிழ்மொழி தினப் போட்டியில் தங்கம் வென்றார்

(ஏ.எம். தாஹாநழீம்)
சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த தரம் -5ல் கல்வி பயிலும் செல்வன், தாஹிர் முகம்மட் அப்றாஸ் 2013  அகில இலங்கை தமிழ்மொழித்தினப் போட்டியில்  பிரிவு -1 ற்கான வாசிப்பு போட்டியில் முதலாமிடத்தை தட்டிக்கொண்டார்.

இந்தப் போட்டி 06.07.2013  ஆந் திகதியன்றி கொழும்பு றோயல் கல்லூரயில் நடைபெற்றது.

இவர். முகம்மட் தாஹிர் எம்.ஏ. ஜாபிரா (ஆசிரியை) ஆகியோரின் மகனுமாவார்.

இந்த வெற்றியின் ஊடாக சம்மாந்துறை வலயமும், சம்மாந்துறை முஸ்லி்ம் மகளிர் வித்தியாயத்தின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள், பாடசாலைச் சமூகமும்  வெகுவாகப்பாராட்டப்படுகின்றார்கள். அத்துடன்  இந்த வெற்றியைப் பெற்றுக்கொள்ள அதன் பிரதி அதிபரான ஏ.எம். தாஹாநழீம் பல்வேறு வகையிலும் இந்த மாணவனுக்கு உதவியாக இருந்தார் என்பதை சுட்டிக்காட்டுதல் பொருத்தமாகும்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா