(ஹனீபா)
கொழும்பில் நடைபெற்ற சமுர்த்தி பயிற்சி செயலமர்வில் கலந்து கொண்டபின் மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர்கள், கருத்திட்ட முகாமையாளர்கள் மற்றும் கருத்திட்ட உதவியாளர் ஆகியோர் அடங்கிய குழுவினர் பயனித்த மினிபஸ் இன்று அதிகாலை 3.00 மணியளவில் மன்னம்பிட்டி பகுதியில் மரத்துடன்மோதி விபத்துக்குள்ளாகி 04 பேர் உயிரிழந்துள்ளனர் 15போர் படுகாயமடைந்துள்ளதுடன் இருவர் தெய்வாதீனமாக எந்தவித காயங்களுமின்றி தப்பியுள்ளனர்.
இவ்விபத்தில் உயிரிழந்த சிரேஷ;ட முகாமையாளர் மேனகா, உதவி முகாமையாளர்களான எஸ்.ஜீவானந்தம், பேரின்பம் சபேஷன், சாரதி சுந்தரம் உதய குமார் ஆகியோரது குடும்பத்தினருக்கு அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி விவசாய ஆராச்சி உதவி உத்தியோகத்தர்கள் சங்கம், அம்பாறை மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் என்பன ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொன்கின்றன.
அத்துடன் இவ்விபத்தில் படுகாயமடைந்துள்ள ஏனைய உத்தியோகத்தர்கள் அனைவரும் விரைவில் குணமடைய இறைவனைப்பிராத்திப்பதாகவும் இவ்வமைப்புக்கள் ஒன்றினைந்து வெளியிட்ட அனுதாப அறிக்கையில் தெரிவித்ததுள்ளனர்.
இச்சம்பவத்தின் மூலம் சோகமடைந்துள்ள மட்டக்களப்பு மாவட்ட சமர்த்தி பணிப்பாளர்,முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அவர்களின் குடும்பத்தார் உற்பட அனைத்த பொதுமக்களுக்கம் தமது ஆறுதலையும் தெரிவித்துள்ளனர்.







0 comments:
Post a Comment