(ஹனீபா)
அம்பாறை மாவட்ட செயலகத்தின் முஸ்லீம் மஜ்லீஸ் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்தார் நிகழ்வும் சிறப்பு பயானும் இராப்போசனமும் இன்று (31) அம்பாறை மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்ட செயலக பிரதம பொறியியலாளர் எம்.ஐ.எம்.றாசீக் தலைமையில் நடைபெற்றது.
இந்த இப்தார் வைபவத்தில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் டி அல்வீஸ், உதவி அரசாங்க அதிபர் கே.விமலநாதன், பிரதம கணக்காளர் ஐ.எம்.ஹூசைன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்தீன், கொழும்பு அல் ஹாமியா அரபுக்கல்லூரியின் பிரதி அதிபர் மௌலவி முஹம்மட் பாறுக் முஹம்மட் பறூட் உட்பட மாவட்டத்தின் சகல பிரதேச செயலகங்களினதும் பிரதேச செயலாளர்கள் உட்பட திணைக்கள தலைவர்கள் மாவட்ட செயலகத்தின் முஸ்லீம், தமிழ், சிங்கள உத்தியோகத்தர்கள் பலரும் கலந்த கொண்டனர்.
இந்நிகழ்வின் போது கொழும்பு அல் ஹாமியா அரபுக்கல்லூரியின் பிரதி அதிபர் மௌலவி முஹம்மட் பாறுக் முஹம்மட் பறூட் அவர்களினால் சிங்கள மொழி மூலமான சிறப்பு பயான் நிகழ்வும் இடம்பெற்றது.









0 comments:
Post a Comment