(அகமட் எஸ்.
முகைடீன்)
கல்முனை வலயக் கல்வி
அலுவலக நலன்புரிச் சங்கம் நடாத்திய வருடாந்த இப்தார் நிகழ்வு இன்று
(31.07.2013) அலுவலக பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
கல்முனை வலயக்
கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை
அல்ஹாமியா அறபுக் கல்லூரி அதிபர் மௌலவி யூ.எல்.ஏ.கபூர் விஷேட பேச்சாளராக கலந்து
கொண்டு உரையாற்றினார்.
இன நல்லுறவை
ஏற்படுத்தும்வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் கல்முனை மாநகர
முதல்வர் கலாநிதி. சிராஸ் மீராசாஹிப், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல்,
எம்.ராஜேஸ்வரன் உட்பட வலயக் கல்வி
அலுவலக பிரதி கல்விப் பணிப்பாளர்களான ஏ.எல்.எம்.முக்தார், எம்.சி.எம்.தௌபீக்,
சௌதுல் நஜீம், எம்.பி.பதூர்தீன் ஆகியோரும் முன்னால் வலயக் கல்விப் பளிப்பாளரும்
பிரதிக் கல்விப் பணிப்பாளர்களும், உதவி கல்விப் பணிப்பாளர்களும், ஆசிரிய
ஆலோசகர்கள் மற்றும் வலய கல்வி அலுவலக உத்தியோகத்தர் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.








0 comments:
Post a Comment