இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

7/26/2013

சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் மாணவி சமூக விஞ்ஞான வினாடிப் போட்டியில் முதலிடம் வென்றார்.

(ஏ.எம். தாஹாநழீம்)
பாடசாலை மாணவர்களின் சமூகக்கல்வி அறிவை விருத்தி செய்யும் நோக்குடன் பாடசாலை மாணவர்களுக்கிடையில் ஒவ்வொரு வருடமும் நடைபெற்றுவருகின்றது அப்போட்டிகளில்  திறமை காட்டும் மாணவர்களை வலய, மாகாண மட்ட போட்டிகளில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகின்றது.  

இதன் அடிப்படையில் கடந்த 22.06.2013 ஆந் திகதியன்று மருதமுனை அல்-மனார் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற மாகாண மட்ட தரம் -8 ற்கான போட்டிப் பிரிவில் முதலாம் இடத்தை தட்டிக்கொண்டார் சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி எம்.எஸ். பாத்திமா இஸ்றா என்பவர்.


மேற்படி மாணவி இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கு  பாடசாலை அதிபர் ரீ.எம். தௌபீக் மற்றும் அப்பாட ஆசிரியையான எம்.ரீ. றணீஸா ஆகியோரின் வழிகாட்டலின் ஊடாக இந்தப் பெருமையை பாடசாலைக்குத் தேடித்தந்துள்ளார்.

இம்மாணவி இது போன்ற பல்வேறு இணைப்பாடவிதான செயற்பாடுகளில் பங்களிப்புச் செலுத்தும் ஒரு மாணவியாகும்.

இவரை எமது பாடசாலைச் சமூகமும், மற்றும் பொது நலன் விரும்புகளை வெகுவாக பாராட்டுகிறார்கள். 

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா