இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

7/26/2013

சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பொலிஸ் பரிசோதனையும் அணிவகுப்பும் Photos


(ஹனீபா)
சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பொலிஸ் பரிசோதனையும் அணிவகுப்பும் இன்று (26) வெள்ளிக் கிழமை காலை பொலிஸ் நிலைய பெறுப்பதிகாரி ஜயந்த தஹனக்க தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட சிரேஷ;ட பொலிஸ் அதிதியட்சகர் அஜித் றொஹன கலந்து கொண்டார்.

அவர் இங்கு உரையாற்றுகையில் பொலிஸ் திணைக்களத்தின் சேவைகள் அர்த்தமுள்ளதாக மக்களை சென்றடைய வேண்டும் பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் உறவுப்பாலமாக பொலிஸாருடைய சேவைகள் காணப்படவேண்டம்.

ஒரு பிரதேசத்தை எடுத்துக் கொண்டால் அங்கு பலதரப்பட்ட மக்கள் காணப்படுவர் அதாவது படித்தவர்கள் பாமரர்கள் துர்நடத்தையில் ஈடுபடுபவர்கள் என பலர் காணப்படுகின்றனர் அவர்களை அறிந்து பொலிஸார் தமது கடமைகளை ஆற்ற வெண்டும்.

பொலிஸாருக்கம் பொதுமக்களுக்குமிடையில் நல்ல பரஸ்பர புரிந்துணர்வு காணப்படவேண்டும் பொலிஸாரின் சேவையினால் மக்கள் கவரப்பட வேண்டும் நாம் பொலிஸ் நமது ஒவ்வொரு விடயத்திலும் பொலிஸாக இருக்க வேண்டும் என கூறினார்.

மேலும் இந்த வைபவத்தில் பொலிஸாரினதும் பொதுமக்களினதும் ஒத்துழைப்புடன் கட்டப்பட்ட புதிய உணவுச் சாலையும் பிரதம அதிதியினால் திறந்து வைக்கப்பட்டதுடன் மரக்கன்றும் நடப்பட்டன.






0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா